சீனாவில் தனது கனவை நனவாக்கியுள்ள ஜோர்டான் இளைஞர்

ஜோர்டானைச் சேர்ந்த வணிகர் மோகனத் அலி முகமது ஷலாபி, சீனாவின் சேஜியாங் மாநிலத்தின் யீவூ நகரில் அரபு உணவகம் ஒன்றை நடந்துகின்றார்.

2002ஆம் ஆண்டில் செஜியாங் மாநிலத்துக்கு வந்த அவர், தனிச்சிறப்புடைய அரபு உணவுப் பண்பாட்டை யீவூ நகருக்குக் கொண்டு வந்தார். யீவூ நகரின் செழுமையான வளர்ச்சியுடன், அவரும் தனது தொழிலில் வெற்றி பெற்றார்.

அவரது உணவகத்தின் பெயர் “பெய்தி. அரபு மொழியில், “பெய்தி”என்பதற்கு “எனது சொந்த ஊர்” என்று பொருள். யீவூ, எனது ஊர் ஆகும் என்று அவர் தெரிவித்தார்.
2014ஆம் ஆண்டு ஜுன் திங்கள் நடைபெற்ற சீனா-அரபு நாடுகள் ஒத்துழைப்பு மன்றக்கூட்டத்தில், முகமது ஷலாபியின் கதையை சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பகிர்ந்து கொண்டார்.

அவர் கூறுகையில், அரபு இளைஞர் ஒருவர் சொந்தமான கனவை மகிழ்ச்சியான வாழ்க்கையை நாடும் சீன மக்களின் சீனக் கனவுடன் ஒன்றிணைத்து பாடுபட்டு வருகிறார். சீனக் கனவு, அரபுக் கனவுடனான சீரான ஒன்றிணைப்பை அவரது கதை வெளிப்படுத்தியுள்ளது என்றார்.


ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை பற்றிய ஓவியம் முகமது ஷலாபியின் உணவகத்தின் சுவரில் காணப்படுகிறது. சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கிற்கு அவரது மனதில் நன்றியுணர்வு நிறைந்திருக்கிறது. ஷிச்சின்பிங் பற்றிய காணொளிகளை அவர் அதிகமாகப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அவர் கூறுகையில், திறப்பு கொண்ட இந்த நாடு, வெளிநாட்டவர்களுக்கு அதிகமான வாய்ப்புகளை வழங்கியுள்ளது. இந்நிலையில் எனது கனவு வெற்றி பெற்றுள்ளது என்றார்.

Please follow and like us:

You May Also Like

More From Author