சீனா மற்றும் உலகம் சார்ந்த வசந்த விழா

Estimated read time 1 min read

சீனாவின் வசந்த விழா ஐ.நாவின் விடுமுறை நாளாக உறுதிப்படுத்தப்பட்ட பின், உலகின் பல்வேறு இடங்களில் வசந்த விழா சூழல் கோலாகலமாகியுள்ளது.

இந்த டிராகன் ஆண்டின் வசந்த விழா, உலக மக்கள் சீனா மற்றும் சீனப் பண்பாடு பற்றி அறிந்து கொள்வதற்கு வாய்ப்புகளை வழங்கியுள்ளது.
வசந்த விழா சீனாவின் மிக பழமைவாய்ந்த மற்றும் முக்கிய பண்டிகையாகும்.

இது ஐ.நா விடுமுறை நாட்கள் பட்டியலில் சேர்க்கப்பட்ட பின், ஐ.நா வாரியங்கள் ஆண்டுதோறும் இத்தினத்தில் கூட்டம் நடத்தாது. இந்நிலையில் சீனத் தேசப் பண்பாட்டை அனுபவிக்கும் அதிக வாய்ப்புகள் மக்களுக்கு கிடைக்கும். தென் கொரியா, வியட்நாம், சிங்கப்பூர் உள்ளிட்ட சுமார் 20 நாடுகள் மற்றும் பிரதேசங்கள், வசந்த விழாவை சட்டப்பூர்வ விழாவாக உறுதிப்படுத்தியுள்ளன.

சீனா மற்றும் சீனத் தேசப் பண்பாட்டின் செல்வாக்கு மேலும் உயர்ந்து வருவதை இது வெளிப்படுத்துகிறது. 78ஆவது ஐ.நா பேரவைத் தலைவர் ஃப்ரான்சிஸ் கூறுகையில், ஐ.நா மற்றும் பலதரப்புவாதத்தில் சீனா முக்கிய பங்காற்றியுள்ளதையும், முழு உலகத்துடன் தனது பண்பாட்டைப் பகிர்ந்து கொள்ள சீன மக்கள் விரும்புவதையும் இது அடையாளப்படுத்துவதாக கருத்து தெரிவித்தார்.


தற்போது, அமெரிக்காவின் நியூயார்க், பிரான்ஸின் பாரிஸ், நெதர்லாந்தின் ஹாக் Hague நகர், மெக்சிகோவின் மெக்சிகோ நகர் முதலிய இடங்களில், உலகில் சுமார் ஐந்தில் ஒரு பகுதியினர் வேறுபட்ட வடிவங்களில் சீனப் புத்தாண்டை வரவேற்றனர். டிராகன் மற்றும் சிங்க நடனம், தாம்புலிங்ஸ் தயாரிப்பு, சந்தைக்குச் செல்வது, வசந்த குறட்பாக்கள் எழுதுவது உள்ளிட்ட வசந்த விழா தொடர்பான நாட்டுப்புற நிகழ்ச்சிகள் சுமார் 200 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் நடத்தப்பட்டன.


அமைதி, சுமுகம் மற்றும் இணக்கம் என்ற சீனத் தேசப் பண்பாட்டுக் கண்ணோட்டத்தை வசந்த விழா பரவல் செய்கிறது. பல்வகை வசந்த விழா நிகழ்ச்சிகளை அனுபவிப்பதன் மூலம், உலக மக்கள் சீனாவை மேலும் அறிந்து கொண்டு, திறந்த, நல்லிணக்கமான, புதுமையான சீனப் பண்பாட்டை அனுபவித்துள்ளனர்.


திறந்த மற்றும் இணக்கமான சீனா, சீனப் பாணியுடைய நவீனமயமாக்கத்தை முன்னேற்றி வருகிறது. பல்வேறு நாடுகளின் கூட்டு பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு பங்காற்றி, வாய்ப்புகளைக் கொண்டு வந்துள்ளது. ஐ.நா தலைமைச் செயலாளர் குட்ரேஸ் வசந்த விழா உரை நிகழ்த்துகையில், ஐ.நா, பலதரப்புவாதம் மற்றும் உலகின் முன்னேற்ற இலட்சியத்திற்கு உறுதியான ஆதரவு அளித்த சீனா மற்றும் சீன மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.


வசந்த விழா, வசந்தத்தின் துவக்கத்தை அடையாளப்படுத்துகிறது. உலகில் சீன வசந்த விழா கொண்டாட்டம் நடத்தப்பட்டதுடன், சீனா, வசந்த விழாவின் மகிழச்சியான சூழலை உலகிற்குக் கொண்டு வந்துள்ளது. வசந்த விழா நாட்டின் எல்லையைக் கடந்து, உலக மக்கள் சிறந்த திசை நோக்கி முன்னேறுவதை தூண்டும் முக்கிய ஆற்றலாக மாறியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author