சீன-ஐரோப்பிய ஒன்றிய உறவுக்குச் சீனா மீதானஐரோப்பிய ஒன்றியத்தின் சரியான புரிதல் முக்கியம்

24ஆவது சீன-ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாடு டிசம்பர் 7ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் சார்லஸ் மைக்கேல் மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோருடன், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அதே நாள் சந்திப்பு நடத்தினார்.

இவ்வாண்டு சீனாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையே பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவு நிறுவப்பட்ட 20ஆம் ஆண்டு நிறைவு ஆகும். கடந்த 20 ஆண்டுகளில், ஐரோப்பிய ஒன்றியம் மீதான மூன்று கொள்கை சார் ஆவணங்களை சீனா முறையே வெளியிட்டது.

ஐரோப்பிய ஒன்றியத்தைப் பல துருவ உலகத்தில் உள்ள ஒரு முக்கிய துருவமாக கருதுகின்ற சீனா, ஐரோப்பிய ஒருங்கிணைப்பில் உறுதியுடன் ஊன்றி நிற்பதோடு, ஐரோப்பிய ஒன்றயம் மீதான கொள்கையின் நிலையான தன்மை மற்றும் தொடர்ச்சியை பராமரித்து வருகின்றது.

சீனாவுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது, சீனா மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கை உறுதியற்று இருப்பதோடு, அவ்வப்போது மாறுதலுக்கு உள்ளாகியும் வந்துள்ளது.  குறிப்பாக சமீபத்திய ஆண்டுகளில், நெடுநோக்கு ரீதியான நிலையில் கருத்தில் கொண்டு, சீனாவை “கூட்டாளி”, “போட்டியாளர்”, ”அமைப்பு முறை சார் எதிர்ப்பாளர்” என கருதுவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்தது.

ஐரோப்பிய ஒன்றியம் சீனாவுக்கு வழங்கிய இந்த மூன்று அடையாளங்களும் ஒன்றுக்கொன்று முரண்பாடுடன் கூடியதாக இருக்கின்றன. சீனா மீது அமெரிக்கா தடை விதிப்பது காரணமாக, சீனா மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் புரிதலில் தவறு ஏற்பட்டதை இது காட்டியுள்ளது. இரு தரப்புறவுகளில் திருப்பம் ஏற்பட்டதன் முக்கிய காரணம் இதுவாகும் என்று கருதப்படுகின்றது.

 

7ஆம் நாள் சந்திப்பின்போது, சீன-ஐரோப்பிய ஒன்றிய உறவுகள் தொடர்பாக சீன அரசுத் தலைவர் குறிப்பிட்டதாவது, சீனாவும் ஐரோப்பிய ஒன்றியமும் உத்திநோக்கு பார்வையுடன் ஒன்றையொன்று கவனித்து, பரஸ்பர நம்பிக்கை மற்றும் புரிந்துணர்வை அதிகரிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

அரசியல் அமைப்பு முறை வெவ்வேறாக இருப்பதாலேயே ஒன்றையொன்று போட்டியாளர்களாகக் கருதக் கூடாது. போட்டியினாலேயே ஒத்துழைப்பைக் குறைக்க்க் கூடாது, கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருப்பதாலேயே நாம் மோதலில் ஈடுபடக் கூடாது என்று ஷிச்சின்பிங் கருத்து தெரிவித்தார்.

சீன-ஐரோப்பிய ஒன்றிய உறவுகளில் உள்ள தலையீடுகளை அகற்றுவதற்கு, ஒத்துழைப்பு மேற்கொள்வதற்கும் இந்த அறிவுரை முக்கியத்துவம் வாய்ந்த்து என்று கருதப்படுகின்றது.

Please follow and like us:

You May Also Like

More From Author