சீன ஒன்றிணைப்பு என்ற வளர்ச்சிப் போக்கு மாறாது:வாங்யீ

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ மே 20ஆம் நாள் அஸ்தானா நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கெடுத்தார். தைவான் பிரதேசத்தில் மே 20ஆம் நாள் நடைபெற்ற பதவி ஏற்பு நிகழ்வு குறித்து அவர் சீனாவின் நிலைப்பாட்டை எடுத்துக்கூறினார்.
அவர் கூறுகையில், ஒரே சீனா என்ற கோட்பாடு மீறப்படக்கூடாது. தைவான், சீனாவின் ஒரு பகுதியாகும். அண்மையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளின் அரசியல் தலைவர்களும், பல்வேறு துறையினரும், ஒரே சீனா என்ற கோட்பாட்டைப் பின்பற்ற வேண்டும் என்று கருத்தைத் தெரிவித்தனர். ஒரே சீனா என்ற கோட்பாட்டில் சர்வதேச சமூகம் ஊன்றி நின்றும் நிலைமை மாறாது என்பதை இது வெளிப்படுத்தியுள்ளது. மேலும், தைவான் சுதந்திர சக்திகளின் பிரிவினை நடவடிக்கை செயல்படுத்தப்பட முடியாது. அவர்களின் பிரிவினை செயல்பாடு, சர்வதேச ஒழுங்கிற்கு ஆக்கிரமூட்டலாக அமைந்து, தைவான் நீரிணை பிரதேசத்திலுள்ள அமைதியை சீர்குலைத்துள்ளது. தவிரவும், சீன ஒன்றிணைப்பு என்ற வளர்ச்சிப் போக்கு மாறாது. தைவான் பிரச்சினை, சீனாவின் உள்விவகாரமாகும். நாட்டின் ஒன்றிணைப்பை நனவாக்குவதை, எந்த சக்தியும் தடுக்க முடியாது என்று தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author