சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் வெளிவிவகார பணி கூட்டம் நடைபெற்றது

சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் வெளிவிவகார பணிக் கூட்டம் 27 28 ஆகிய நாட்களில் நடைபெற்றது. சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளரும் அரசுத் தலைவரும் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு முக்கிய உரை நிகழ்த்தினார்.


புதிய யுகத்தில் சீன தனிச்சிறப்புடைய தூதாண்மை பணி எட்டியுள்ள சாதனைகளையும் அனுபவங்களையும் ஷி ச்சின்பிங் தொகுக்க கூறினார். புதிய பயணத்தில் வெளிவிவகார பணி சந்தித்த சர்வதேசச் சூழலையும் பொறுப்புகளையும் அவர் விளக்கியதுடன் எதிர்காலத்தில் சீனாவின் வெளிவிவகார பணி குறித்த திட்டத்தையும் தெரிவித்தார்.


சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18ஆவது தேசிய மாநாட்டுக்குப் பிறகு, சீன தனிச்சிறப்புடைய சோஷலிச இட்சிய வளர்ச்சியை முன்னேற்றும் போக்கில், வெளிவிவகார பணி நிறைய சாதனைகளைப் பெற்றுள்ளது.

முதலாவது, ஷி ச்சின்பிங் தூதாண்மை சிந்தனை உருவாக்கப்பட்டது. இரண்டாவது, சீன பாணியுடைய தூதாண்மை தனிச்சிறப்புகள் வெளிக்காட்டப்பட்டன.

மூன்றாவது, மனிதகுல பொது எதிர்கால சமூகத்தை உருவாக்குவது, முன்மொழியப்பட்டது. நான்காவது, தலைவர் தூதாண்மை நடவடிக்கையின் முக்கியத்துவம் வலுப்படுத்தப்பட்டது. ஐந்தாவது, பல்வேறு தரப்புகளுடனான உறவுகள் ஒருங்கிணைக்கப்பட்டன. ஆறாவது, பன்முக நெடுநோக்கு திட்டம் வகுக்கப்பட்டது.

ஏழாவது, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை ஆக்கப்பணி தரமாக கட்டியமைக்கப்பட்டது. எட்டாவது, வளர்ச்சியும் பாதுகாப்பும் ஒருங்கிணைக்கப்பட்டன. ஒன்பதாவது, உலக மேலாண்மையில் சீனா ஆக்கப்பூர்வமாகக் கலந்துகொண்டது. பத்தாவது, சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் தலைமை வலுப்படுத்தப்பட்டது.

Please follow and like us:

You May Also Like

More From Author