சீன-கென்ய தூதாண்மையுறவின் 60வது ஆண்டு நிறைவுக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து

சீனாவும் கென்யாவும் தூதாண்மையுறவை நிறுவிய 60வது ஆண்டு நிறைவின் கொண்டாட்டத்திற்காக, 14ம் நாள் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், கென்ய அரசுத் தலைவர் ரூட்டோ ஆகியோர் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.


சீன-கென்னிய உறவுக்கு முக்கியத்துவம் அளிப்பதாகத் தெரிவித்த ஷிச்சின்பிங், ரூட்டோவுடன் இணைந்து, இரு நாட்டுத் தூதாண்மையுறவின் 60வது ஆண்டு நிறைவைப் புதிய துவக்கப் புள்ளியாகக் கொண்டு, இரு நாட்டு மறுமலர்ச்சி போக்கில் சிறப்பு வாய்ந்த ஒத்துழைப்பை வலுப்படுத்தி, மேலும் நெருங்கிய சீன-கென்ய பொது எதிர்கால சமூகத்தை உருவாக்க விரும்புகிறேன் என்றார்.


ரூட்டோ கூறுகையில், ஒரு மண்டலம் ஒரு பாதை சர்வதேச ஒத்துழைப்புக்கான 3வது உச்சிமாநாடு மற்றும் ஜோன்னெஸ்பேர்க் சீன-ஆப்பிரிக்க தலைவர்கள் பேச்சுவார்த்தையில் படைக்கப்பட்ட சாதனைகளை சீனாவுடன் கூட்டாக நடைமுறையாக்க விரும்புவதாகத் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author