சீன- நவ்ரு உறவின் முன்னேற்றம்

சீன- நவ்ரு உறவின் முன்னேற்றம்

 

2024ஆம் ஆண்டின் வசந்த காலத்தில், சீன-நவ்ரு நட்புறவு மேலும் ஆழமாகியுள்ளது.

மார்ச் 25ஆம் நாள் பிற்பகல், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், நவ்ரு அரசுத் தலைவர் டேவிட் அடியாங்குடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஷிச்சின்பிங் கூறுகையில்,

நட்புறவு தொடங்கினால், ஒளிமயமான எதிர்காலம் இருக்கும். மனமார்ந்த ஒத்துழைப்பு இருந்தால், அதிகமான சாதனைகள் கிடைக்கும் என்றார்.

பெரிய நாடோ அல்லது சிறிய நாடோ, அனைத்து நாடுகளுக்கும் சமத்துவம் கிடைக்கச் செய்வதற்கான சீனாவின் முயற்சியை  நவ்ரு வெகுவாக பாராட்டியுள்ளது. ஒரே சீனா என்ற கொள்கையைப் பின்பற்றி, சீனாவுடனான ஒத்துழைப்புகளை தொடர்ந்து ஆழமாக்க விரும்புவதாக அரசுத் தலைவர் டேவிட் ரானிபோக் அடியாங் தெரிவித்தார்.

1971ஆம் ஆண்டில், ஐ.நா பொது பேரவையின் 2758ஆவது தீர்மானத்தில் உறுதிப்படுத்தப்பட்ட ஒரே சீனா எனும் கொள்கை, உலகில் ஒருமித்த கருத்தாக மாறியுள்ளது. ஒரே சீனா எனும் கொள்கை, முன்னேற்றப் போக்காவும், மக்களின் விருப்பமாகவும் திகழ்கிறது.

நவ்ரு அரசுத் தலைவர் சீனாவில் பயணம் மேற்கொண்ட போது, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை எனும் முன்மொழிவைக் கூட்டாகக் கட்டியமைக்கும் ஆவணத்தில் கையொப்பமிட்டுள்ள இன்னொரு நாடாக நவ்ரு மாறியுள்ளது.

பசிபிக் பெருங்கடல் பிரதேசத்தில் அமைந்துள்ள பல நாடுகளின் பொருளாதார நிலை மற்றும் மக்களின் வாழ்க்கையை இந்த முன்மொழிவு மேம்படுத்தியுள்ளது. இம்முன்மொழிவைக் கூட்டாகக் கட்டியமைப்பது, இரு நாட்டுறவின் ஆழமாக்கத்திற்கு புதிய உந்து ஆற்றலைக் கொண்டு வரும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author