சீன-பிரான்ஸ் தூதாண்மை உறவு நிறுவப்பட்டதன் 60ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், சீன ஊடக குழுமமும், பிரான்ஸின் பி.எஃப்.எம் பொருளாதார தொலைக்காட்சி நிலையமும் ஜனவரி 27ஆம் நாள் உயர் நிலை பேச்சுவார்த்தை எனும் சிறப்பு நிகழ்ச்சியை வெளியிட்டன.

இரு நாட்டுப் பண்பாடு மற்றும் சுற்றுலா துறை பிரமுகர்கள், சிந்தனை கிடங்கு நிபுணர்கள் மற்றும் அறிஞர்கள் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கெடுத்து, சீன-பிரான்ஸ் பரிமாற்றம் குறித்து உரையாடி, இரு நாட்டு அரசுத் தலைவர்கள் கூட்டாக வரைந்த இரு நாட்டு பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவின் பரந்த எதிர்காலத்தை முன்னாய்வு செய்தனர்.


பிரான்ஸின் முன்னாள் தலைமையமைச்சர் ராஃபரின் Raffarin இந்நிகழ்ச்சி வெளியிடப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்தார். அவர் கூறுகையில், பிரான்ஸுக்கும் சீனாவுக்கும் இடையேயான ஒத்துழைப்பு புதிய முன்னேற்றம் அடைந்து வருகிறது. பரிமாற்றத்தை வலுப்படுத்துவது இன்னும் முக்கியமானது என்று தெரிவித்தார்.


சீன ஊடக குழுமத்தின் இயக்குநர் ஷென் ஹாய்சியுங் உரை நிகழ்த்துகையில், சீன மற்றும் பிரான்ஸின் அரசுத் தலைவர்களின் வழிக்காட்டலுடன், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி, விளையாட்டு, கல்வி, சுற்றுலா, பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வம் உள்ளிட்ட துறைகளில் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை இரு தரப்பும் வலுப்படுத்தும் என்று தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author