சீன மக்கள் குடியரசின் 74ஆவது ஆண்டு நிறைவுக்கான விருந்தில் ஷி ச்சின்பிங்கின் முக்கிய உரை

சீன மக்கள் குடியரசின் 74ஆவது ஆண்டு நிறைவுக்கான விருந்தில் ஷி ச்சின்பிங்கின் முக்கிய உரை

சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 74ஆவது ஆண்டு நிறைவுக்கான விருந்து செப்டம்பர் 28ஆம் நாளிரவு மக்கள் மாமண்டபத்தில் நடைபெற்றது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங் இவ்விருந்தில் பங்கெடுத்து முக்கிய உரை நிகழ்த்தினார்.


பல்வேறு தேசிய இன மக்கள், விடுதலை படையினர்கள், ஜனநாயக கட்சியினர்கள், கட்சி சாரா பிரமுகர்கள் ஆகியோருக்கு உன்னத மரியாதையையும், ஹாங்காங், மக்கௌ, மற்றும் தைவான் சக நாட்டவர்களுக்கும் வெளிநாட்டு வாழ் சீனர்களுக்கும் மனமார்ந்த வணக்கத்தையும், சீன நவீனமயமாக்கத்தின் கட்டுமானத்துக்கு ஆதரவளிக்கும் நட்பு நாடுகள் மற்றும் சர்வதேச நண்பர்களுக்கு உளமார்ந்த நன்றியையும் ஷி ச்சின்பிங் முதலில் தெரிவித்தார்.

மேலும், புதிய பயணத்தில் சீனாவின் எதிர்காலம் வெளிச்சமாக உள்ளது. ஒற்றுமையிலிருந்து எங்கள் ஆற்றல் வருகிறது. தங்கத்தை விட எங்கள் நம்பிக்கை மேலும் மதிப்புமிக்கது. நாங்கள் நம்பிக்கையை உறுதிப்படுத்தி, விடா முயற்சியுடன் ஒற்றுமையாகப் போராடி, இன்னல்களைச் சமாளித்து, வலிமைமிக்க நாட்டைக் கட்டமைப்பது, தேசத்தின் மறுமலர்ச்சியை நனவாக்குவது ஆகியவற்றை நோக்கி அசையாமல் முன்னேற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.


சீனத் தலைமை அமைச்சர் லீ சியாங்கின் தலைமையில் நடைபெற்ற இவ்விருந்தில், சுமார் 800 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரமுகர்கள் மகிழ்ச்சியுடன் ஒன்றுகூடி, சீன மக்கள் குடியரசின் பிறந்த நாளைக் கொண்டாடினர்.

Please follow and like us:

You May Also Like

More From Author