சீன விடுமுறை பொருளாதாரத்தின் வலுவான அதிகரிப்பு

இவ்வாண்டின் நிலா விழா மற்றும் தேசிய தின விடுமுறையின் போது, சீனாவின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் சுற்றுலா துறையின் வளர்ச்சி வலிமையாக மீட்சியடைந்து, நுகர்வு செலவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சீன சுற்றுலா துறையின் வளர்ச்சி முன்கண்டிராத அளவை எட்டியது. சீனாவின் நுகர்வுச் சந்தையின் உயிராற்றலை வெளிகாட்டியதோடு, உலகச் சுற்றுலா துறையின் வளர்ச்சியையும் விரைவுபடுத்த உதவும் என்று பல வெளிநாட்டுச் செய்திஊடகங்கள் தெரிவித்தன.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியின்படி,

இவ்வாண்டின் மேற்கூறிய சீனாவின் இரண்டு விழாகளின் போது, சீனப் பொது மக்களின் நுகர்வில் பொருளியலாளர்கள் பலர் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றனர். தொடர்புடைய தரவுகளின்படி, செப்டம்பர் 29ஆம் நாளில் மட்டுமே, சீன ரயில்வேயின் மூலம் 2 கோடிக்கு மேலான பயணிகள் சுற்றுப் பயணம் மேற்கொள்வது முன்கண்டிராத அளவாகும்.

ஸ்பெயின் லா ஏஜென்சி யிஃபயி வெளியிட்ட செய்தியின்படி, இவ்விரண்டு விழாக்களின் போது சுற்றுலா தொடர்புடைய தரவுகள், சீனாவின் நகர்வு அதிகரிப்பு மற்றும் பொருளாதாரத்தின் மீட்சியை வெளிக்காட்டியுள்ளது.

சிங்கப்பூர் லியான்ஹே ஜாபாவோ எனும் செய்தி நாளேட்டின்படி, இவ்விரண்டு விழாக்களின் போது, சிங்கப்பூரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள சீனப் பயணிகள் அதிகரித்து, உள்ளூர் சுற்றுலாத் துறையையும் நுகர்வையும் ஊக்குவித்துள்ளது.பிரிட்டனின் பைனான்சியல் டைம்ஸ் வெளியிட்ட பொருளியலாளர்களின் கருத்துகளை மேற்கோள் காட்டி, ஆகஸ்ட் திங்களில், சீனப் பொருளாதாரம் சீராக மாறி, உற்பத்தித் துறை நிதானமாக மீட்சியடைந்துள்ளது. இப்பின்னணியில், இவ்விரண்டு விழாக்களின் போது, சீனப் பொருளாதாரம் மேலும் வலிமையாக வளர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Please follow and like us:

You May Also Like

More From Author