ஜப்பானைச் சேர்க்க விரும்பிய ஓகஸ் தவறு!

Estimated read time 1 min read

 

“ஓகஸ் கூட்டணியில்” சேர்வதற்காக அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகியவை அண்மையில் அழைத்தன. இது சர்வதேசத்தில் அதிக கவலையை ஏற்படுத்தியது.

இது பிரதேசப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள கடுமையான அச்சுறுத்தலாகும். பல்வேறு தரப்புகளின் கவலைகளை “ஓகஸ்” பொருட்படுத்தாமல் இக்கூட்டணியின் உறுப்பு நாடுகளின் விரிவாக்கத்தை முன்னேற்றுவது, முகாம் பகைமை மற்றும் அணு பரவல் ஆபத்தை அதிகரித்து, ஆசிய-பசிபிக் பிரதேசத்தின் அமைதியையும் நிதானத்தையும் சீர்குலைக்கும் என்று ஜப்பான் மக்கள் குற்றஞ்சாட்டினர்.

வலுவான இராணுவ நிறம் கொண்ட “ஓகஸ்” என்ற குழுவில் ஜப்பான் சேருவது, இக்குழுவால் பயன்படுத்தப்படும் கருவியாக மாறுவது உறுதி.

இதன் காரணமாக, எதிர்காலத்தில், அமெரிக்காவிற்கும் மற்ற நாடுகளுக்கும் இடையில் தூதாண்மை பரிமாற்றப் பாலமாக ஜப்பான் பங்காற்றும் வாய்ப்பு, பெரிதும் குறைக்கப்படும். எதிர்காலத்தில் ஜப்பான் மேலும் சீனாவுக்கான எதிர்ப்பின் முன்னணியில் மற்றும் ஆபத்தான சூழ்நிலைக்குத் தள்ளப்படும் என்பது இதன் பொருள்.

“இந்த ‘நெடுநோக்கு தவறு’  ஆசியாவை எதிர் முகாம்களாக மட்டுமே பிரிக்கும்.” என்று இலங்கை அரசுத் தலைவர் ரணில் விக்ரமசிங்கே கூறினார். ஜப்பான் இக்குழுவில் சேர்ந்தால், “ஓகஸ்” வடகிழக்கு ஆசியாவிற்கு விரிவடையும். இது பிராந்தியத்தில் அதிக எதிர்மறையான தாக்கங்களைக் கொண்டுவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author