தென் சீனக் கடலில் குழப்பத்தை உருவாக்க அமெரிக்கா, ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் முயற்சி

அமெரிக்கா, ஜப்பான், பிலிப்பைன்ஸ் ஆகிய மூன்று நாடுகள் 11ஆம் நாள் வாஷிங்டனில் மூன்று தரப்பு சார் உச்சி மாநாட்டை நடத்தின.

மாநாட்டுக்குப் பின் மூன்று தரப்புகளும் வெளியிட்ட கூட்டு அறிக்கையில், பாதுகாப்பு துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று அறிவித்ததோடு, சீனா மீது அவை குற்றஞ்சாட்டின.

பிலிப்பைன்ஸுக்கான அமெரிக்காவின் ஆதரவு, தென் சீனக் கடலின் நிலைமை குழப்பமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தை பிலதிபலிக்கிறது.

கிழக்காசியப் பிரந்தியம் அமைதியாக இருந்தால், அப்பகுதியில் அமெரிக்க மேலாதிக்கவாத்தின் நியாயமானத் தன்மை சந்தேகிக்கப்படும் என்று சில ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டினர்.

அண்மையில், செய்தியாளருக்குப் பேட்டி அளித்த பிலிப்பைனின் முன்னாள் அரசுத் தலைவர் ரொட்ரிகோ துதெர்த்தே (Rodrigo Duterte), தென் சீனக் கடல் முதலில் அமைதியாக இருந்தது, ஆனால் அமெரிக்கர்களின் வருகைக்குப் பிறகு, அது சண்டைகள் நிறைந்ததாக மாறிது என்று தெரிவித்தார்.

பிலிப்பைன்ஸின் “ஆசியா நூற்றாண்டு”என்னும் நெடுநோக்கு திட்ட ஆய்வகத்தின் துணைத் தலைவர் அண்ணா மரின்பெர்க்-உய் கூறுகையில், அமெரிக்காவுக்கும் ஜப்பான்க்கும், தென் சீனக் கடல் பிரச்சினையில் தொடர்பு ஏதும் இல்லை. இதனால், அவை இப்பிரச்சினையில் தலையிடக் கூடாது என்றும், அமெரிக்கா, ஜப்பான், பிலிப்பைன்ஸ் ஆகிய மூன்று தரப்புக் கூட்டமும் அவற்றின் பனிப்போர் கருத்தும், ஒத்துழைப்புக்கு மாறாக மேலும் எதிர்ப்பை அதிகரிக்கவும், தென் சீனக் கடலின் பதற்ற நிலைமையை தீவிரமாக்கவும் செய்யும் என்றும் கருத்து தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author