தைவான் பிரச்சினை பற்றிய உலகளவிலான கருத்துக்கணிப்பு

தைவான் பிரதேசத்தின் தலைவர் அண்மையில் “தைவான் சுதந்திரம்” பற்றிய கருத்தைப் பரவல் செய்தது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என் உலகளவில் நடத்திய கருத்துக்கணிப்பின்படி, 89.95 விழுக்காட்டினர் ஒரே சீனா என்ற கோட்பாட்டில் உறுதியுடன் ஊன்றி நின்று, தைவான் சுதந்திரச் செயல்பாட்டை எதிர்க்கின்றனர்.


தைவான், சீனாவிலிருந்து பிரிக்கப்பட்ட முடியாத ஒரு பகுதியாகும். தற்போது, ஒரே சீனா என்ற கோட்பாடு, சர்வதேச உறவின் அடிப்படை கோட்பாடு ஆகும்.

இதுவரை, 183 நாடுகள் ஒரே சீனா கோட்பாட்டின் அடிப்படையில், சீனாவுடன் தூதாண்மை உறவை உருவாக்கியுள்ளன. இக்கருத்துக்கணிப்பில் பங்கேற்ற 86.53 விழுக்காட்டினர் தெரிவிக்கையில், தைவானில் சூழ்நிலை எப்படி மாறினாலும், ஒரே சீனா என்ற கோட்பாட்டில் சர்வதேச சமூகம் ஊன்றி நிற்கின்ற அடிப்படை நிலைமை மாறாது என்றார்.


தைவான் பிரச்சினை, சீனாவின் உள் விவகாரமாகும். தைவானின் எதிர்காலம், தைவான் சகநாட்டவர்கள் உள்ளிட்ட 140 கோடிக்கும் மேலான சீனர்களால் கூட்டாக முடிவு செய்யப்பட வேண்டும் என்று 90.21 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர்.


கடந்த சில ஆண்டுகளாக, தைவான் நீரிணை சூழ்நிலை, சர்வதேச சமூகத்தின் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. தைவான் நீரிணை பகுதியின் அமைதி மற்றும் நிலைத்தன்மை, ஆசிய-பசிபிக் பிரதேசம் மற்றும் உலகத்தின் பாதுகாப்புக்கு மிக முக்கியமானது என்று 94.78 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.


இக்கருத்துக்கணிப்பு, ஆங்கிலம், ஸ்பெனிஷ், பிரெஞ்சு, அரபு, ரஷியா ஆகிய மொழிகளில் நடத்தப்பட்டது. 24 மணி நேரத்துக்குள் 11645 பேர் கருத்து தெரிவித்தனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author