பிரிட்டனுக்கு அச்சுறுத்தல் சீன நிறுவனங்கள் அல்ல

நஷினல் க்ரீட் எனும் பிரிட்டன் மின் வலைப்பின்னல் நிறுவனம், பாதுகாப்பு என்ற சாக்குப்போக்கில் இந்நிறுவனத்திற்கு சீன நிறுவனங்கள் வினியோகித்துள்ள உபகரணங்களை சமீபத்தில் அகற்றியுள்ளது என்று பிரிட்டன் செய்தி ஊடகம் வெளியிட்டது.

இதற்கு இந்நிறுவனம் நேரடியாக பதிலளிக்கவில்லை.
அபாயம் இல்லாவிடில், ஏன் பாதுகாப்புப் பிரச்சினை திடீரென தோன்றியது? சீன நிறுவனங்கள் மீது பிரிட்டன் காரணமின்றி குற்றஞ்சாட்டியது.

இதில் பிரிட்டனின் இரட்டை அரசியல் நோக்கங்கள் உள்ளன. ஒருபுறம், அமெரிக்காவைப் பின்தொடர்ந்து சீன நிறுவனங்கள் மீது அடக்குமுறை நடவடிக்கை மேற்கொள்வதன் மூலம் பிரிட்டன்-அமெரிக்காவின் சிறப்பு கூட்டணியுறவை எடுத்துக்காட்டுகிறது.

மறுபுறம், அடுத்தாண்டில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெறும் விதமாக, ஆளும் கட்சி சீனா மீது வலுவான நிலைப்பாட்டை எடுக்கிறது என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.


உண்மையில், பிரிட்டன் எதிர்கொண்டுள்ள அச்சுறுத்தல் சீன நிறுவனங்கள் அல்ல. இதற்கு மாறாக, மக்களின் நலன்களைப் பொருட்படுத்தாமல், அரசியல் தந்திரம் நடத்தி வரும் அரசியல்வாதிகள் தான். பாதுகாப்பு என்ற பெயரில், விநியோகச் சங்கிலியைத் துண்டித்து சீன நிறுவனங்கள் மீது அடக்குமுறை செய்து, சீனாவின் வளர்ச்சியைத் தடுப்பது அதன் நோக்கமாகும்.
சீனா, பிரிட்டனுக்குக் கூட்டாளியாகவும் வளர்ச்சி வாய்ப்புகளாகவும் விளங்குகின்றன.

பயனுள்ள ஒத்துழைப்புகளை மேற்கொண்டு, பரஸ்பர நலன் தருவது சீனாவுக்கும் பிரிட்டனுக்குமிடையேயான சரியான பாதையாகும். இரு தரப்புறவை சீராகவும் நிதானமாகவும் வளர்த்து, உலகத்திற்கு நன்மை அளிக்க பாடுபடும் என்று பிரிட்டனைச் சேர்ந்த பகுத்தறிந்தவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

Please follow and like us:

You May Also Like

More From Author