புதிய எரியாற்றல் தொழில் நுட்பம் மற்றும் பாதுகாப்பு பற்றிய ஷிச்சின்பிங்கின் கருத்துகள்

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு பிப்ரவரி 29ஆம் நாள் பிற்பகல், புதிய எரியாற்றல் தொழில் நுட்பம் மற்றும் எரியாற்றல் பாதுகாப்பு குறித்து 12ஆவது கூட்டத்தொடரில் பயிலரங்கு ஒன்றை நடத்தியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கி பேசுகையில்,

எரியாற்றல் பாதுகாப்பு பிரச்சினை, பொருளாதாரம் மற்றும் சமூகத்தின் முழு வளர்ச்சி நிலைமையுடன் தொடர்புடையது.

தூய்மையான எரியாற்றலை வளர்த்து, பொருளாதாரம் மற்றும் சமூகத்தின் பசுமையான, கரி குறைந்த வளர்ச்சி கட்டமைப்பின் சீர்திருத்தத்தை முன்னெடுப்பது, காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதில் சர்வதேச சமூகத்தின் ஒத்த கருத்துகளாகும்.

புதிய எரியாற்றலின் உயர் தரமுள்ள வளர்ச்சியை பெரிதும் விரைவுபடுத்தி, சீனத் தனிச்சிறப்பு வாய்ந்த நவீனமயமாக்கக் கட்டுமானத்திற்குப் பாதுகாப்பான சரியான எரியாற்றல் உத்தரவாதம் வழங்கி, தூய்மையான அழகான உலகத்தைக் கூட்டாகக் கட்டியமைப்பதற்குச் சீனா மேலும் பங்காற்ற வேண்டும் எனக் குறிப்பிட்டார். 

Please follow and like us:

You May Also Like

More From Author