பெய்ஜிங்கில் நடைபெற்ற மத்திய கிராமப்புறப் பணிக் கூட்டம்

மத்திய கிராமப்புறப் பணிக் கூட்டம் டிசம்பர் 19, 20 ஆகிய நாட்களில் பெய்ஜிங்கில் நடைபெற்றது.

வேளாண்மை, கிராமப்புறம் மற்றும் விவசாயிகள் தொடர்பான பணியின் தற்போதைய நிலைமை மற்றும் அறைக்கூவல்கள் இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டு, அடுத்த ஆண்டிற்கான தொடர்புடைய பணிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.


இக்கூட்டத்தை முன்னிட்டு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங், வேளாண்மை, கிராமப்புறம் மற்றும் விவசாயிகள் தொடர்பான பணிக்கு முக்கிய உத்தரவிட்டார்.

சீனாவின் நவீனமயமாக்கத்தை முன்னேற்றுவதில் வேளாண்துறையின் அடிப்படையை வலுப்படுத்தி, கிராமப்புறத்தின் பன்முக வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும்.

உணவுப் பாதுகாப்புக்கான பொறுப்பை கட்சியும் அரசும் கூட்டாக நிறைவேற்றி, தானிய நடவு பரப்பளவை நிலைநிறுத்துவதோடு, தனி வயல் விளைச்சலையும் அதிகரிக்க வேண்டும். அறிவியல் தொழில் நுட்பம் மற்றும் சீர்திருத்தத்தின் இயக்காற்றலை வலுப்படுத்தி, வேளாண்மை, கிராமப்புறம் மற்றும் விவசாயிகள் தொடர்பான பணியின் அமைப்புமுறையையும் இயங்குமுறையையும் முழுமைப்படுத்தி, வேளாண்துறையின் நவீனமயமாக்கத்துக்கு உயிராற்றலை அதிகரிக்க வேண்டும்.

கிராமப்புற தொழில்களின் வளர்ச்சி நிலை, கிராமப்புறக் கட்டுமான நிலை மற்றும் கிராமப்புற நிர்வாக நிலையை உயர்த்தி, விவசாயிகளின் வருமான அதிகரிப்புக்கான நடவடிக்கைகளை வலுப்படுத்தி, கிராமப்புற வளர்ச்சி உண்மையான முன்னேற்றம் மற்றும் சாதனையைப் பெறுவதை ஊக்குவிக்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.


நடப்புக் கூட்டத்தில், ஷி ச்சின்பிங்கின் உத்தரவு அறிவிக்கப்பட்டு கற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், கிராமப்புறப் பன்முக வளர்ச்சியைப் பயனுள்ள முறையில் வலுவுடன் முன்னேற்றுவதற்கான சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி மற்றும் சீன அரசவையின் கருத்துகள் பற்றியும் விவாதம் நடத்தப்பட்டது.

Please follow and like us:

You May Also Like

More From Author