பெய்ஜிங்கில் லாங்கிங்சியா பனி விழா துவக்கம்

Estimated read time 0 min read

38வது லாங்கிங்சியா பனி விளக்கு மற்றும் பனி விழா, ஜனவரி 15ஆம் நாள் பெய்ஜிங்கின் யான்ச்சிங் மாவட்டத்தில் தொடங்கியது.


சுமார் 2 இலட்சத்து 50 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட லாங்கிங்சியா சுற்றுலா தலத்தில், பனி விளக்கு கண்காட்சி, பனிச் சிற்ப கண்காட்சி உள்ளிட்ட தனித்துவமான பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

அவற்றில் பனிச் சிற்பங்கள் பகுதி சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமான பகுதியாக விளங்குகிறது. இதில் மொத்தம் 300 பனிச் சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு வருகின்றன.

மேலும், இந்த சுற்றுலா தலத்தில் 50 வண்ண விளக்குகளும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட 2000 மரங்களும் அற்புதமான இரவு காட்சியை உருவாக்குகின்றன.

துவக்க விழாவில் நடைபெற்ற ட்ரோன் ஷோ நிகழ்ச்சியில் 1,000 ட்ரோன்கள் மூலம் உருவாக்கப்பட்ட டிராகன் வடிவத்தை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கலாம். மேலும் 10 ஆயிரம் சதுரமீட்டர் பரப்பளவைக் கொண்ட பொழுதுபோக்கு வசதி நிறுவப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகள் பல்வகை பனி விளையாட்டுகளை அனுபவிக்கலாம். லாங்கிங்சியா பனி விழா பிப்ரவரி 28ஆம் நாள் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த குளிர்காலத்தில் ஹெலாங்ஜியாங், ஜிலின் உள்ளிட்ட மாகாணங்களில் பனியைக் கருப்பொருள் கொண்ட சுற்றுலா தலங்கள், பயணிகளிடையே அதிக வரவேற்பு பெற்று வருகிறன.

குறிப்பாக, ஹெலாங்ஜியாங் மாகாணத்தின் ஹார்பின் நகரில் சர்வதேச பனி விழா அதிகமான சுற்றுலா பயணிகளைக் கவர்ந்துள்ளதோடு, உள்நாடு மற்றும் வெளிநாடுகளின் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. பனிப் பொருளாதாரம், உள்ளூர் சுற்றுலா துறையின் வளர்ச்சிக்கு உந்து சக்தியை கொண்டு செல்கிறது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author