பெய்ஜிங் வரலாற்றை எழுதி கொண்டிருக்கிறது : தாமஸ் பாச்

Estimated read time 0 min read

2013ஆம் ஆண்டு, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தாமஸ் பாச், சீனாவை முதல் இடமாக தேர்வு செய்து தனது பயணம் மேற்கொண்டார். அந்த ஆண்டில், 2022ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடத்துவதாக சீனா விண்ணப்பம் சமர்ப்பித்தது.
2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைமையகத்திற்கு சென்று பயணம் செய்தார். அப்பயணத்தில் பாச் கூறுகையில்,
‘விளையாட்டுத் துறையில் அறிஞராக ஷிச்சின்பிங் இருக்கிறார் என்றும் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைக் கொண்ட சமூகத்தைக் கட்டியெழுப்புவதில் விளையாட்டு முக்கிய பங்களிப்பு உள்ளது என நினைக்கிறார்’ என்றும் குறிப்பிட்டார்.
2022ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடத்துவதாக விண்ணப்பம் செய்த முதற்கட்டத்தில், 30 கோடி மக்கள் பனி விளையாட்டுக்களில் பங்கேற்க செய்வது, சீனா இப்போட்டி நடத்துவதற்கான மிக பெரிய இலக்கு ஆகும் என்று ஷிச்சின்பிங் முன்வைத்தார். இதைத் தொடர்ந்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு, பனி விளையாட்டுக்கள் சீனாவில் மிகவும் பிரபலமாகி வந்துள்ளது. சின்ஜியாங்கின் அலேதாய், பெய்ஜிங், ஜிலின், ஹார்பின் உள்ளிட்டவற்றில் உள்ள பனி விளையாட்டுப் தளங்கள் சுற்றுலா பயணிகளைக் கவர்ந்தோடு, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. மேலும், வெளிநாட்டு இணைய பயனர்கள், பனி விளையாட்டு மீதான சீன மக்களின் உற்சாகங்களை வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.
‘பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி மைல் கல்லாகும். அதற்குப் பிறகு, பனி விளையாட்டு, உலகளாவிய விளையாட்டாக மாறியுள்ளது’ என்று தாம்ஸ் பாச் கருத்து தெரிவித்தார். ஒலிம்பிக் விளையாட்டுக்கு ஷிச்சின்பிங் அளித்த பெரிய ஆதரவுக்கு நன்றி தெரிவித்த தாமஸ் பாக் கூறுகையில்
‘நமது கூட்டாளி சீனா இலக்கு நிர்ணயித்தால், மாபெரும் மனவுறுதி மற்றும் நடவடிக்கையுடன் இதை நிறைவேற்றும். பெய்ஜிங் புதிய வரலாற்றை எழுதிக் கொண்டிருப்பதற்கு இதுவே காரணமாகும்’ என்று குறிப்பிட்டார்.

Please follow and like us:

You May Also Like

More From Author