பெரிய மற்றும் சிறிய நாட்டு உறவின் சிறந்த முன்மாதிரி: சீனா, ஆண்டிகுவா மற்றும் பார்புடா

Estimated read time 0 min read

கிழக்கு சைபீரிய கடலில், சீன மக்கள் குடியரசுடன் தூதாண்மை உறவை நிறுவிய முதற்கட்ட நாடுகளில் ஆண்டிகுவா மற்றும் பார்புடா ஒன்றாகும். தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 41 ஆண்டுகளில், ஒன்றுக்கு ஒன்று மதிப்பு மற்றும் ஆதரவு அளிக்கும் அடிப்படையில், இரு நாடுகள் எப்போதும் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பெரிய மற்றும் சிறிய நாடுகளிடையே சமமாகப் பழகி, ஒத்துழைப்புடன் கூட்டு வெற்றி பெறுவதற்கான முன்மாதிரியாகவும் மாறியுள்ளன.
இந்த ஆண்டு அந்நாட்டின் தலைமை அமைச்சர் காஸ்டன் பிரவுன் சீனாவில் பயணம் மேற்கொண்டார்.

இப்பயணத்துக்கு முன்பு அவர் கூறுகையில், சீனாவுக்கும் ஆண்டிகுவா மற்றும் பார்புடாவுக்கும் இடையிலான உறவு, பெரிய மற்றும் சிறிய நாடுகளிடையேயான உறவுக்கான சிறந்த முன்மாதிரியாகும் என்று அவர் வலியுறுத்தினார்.
சீன ஊடகக் குழுமத்தின் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு சிறப்புப் பேட்டி அளித்த பிரவுன் கூறுகையில்,
சீனாவின் நிறுவனம் ஒன்று, வேளாண் துறையில் நமது திறனை மேம்படுத்துவதற்கு உதவி வழங்கி வருகிறது.

குறிப்பிட்ட அளவிற்கு உணவுப் பாதுகாப்பு இலக்கை நனவாக்க பாடுபடுகிறோம். ஆண்டிகுவா மற்றும் பார்புடாவின் 80 விழுக்காட்டு உணவு தானியங்கள் இறக்குமதியைச் சார்ந்திருக்கின்றது. இவை அதிகமாக அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது. சிறிய தீவு நாடுகள் எதிர்கொள்ளும் அறைகூவல்களில் இதுவும் ஒன்றாகும்.

ஏனென்றால் வேளாண் உற்பத்திக்கு ஏற்ற போதுமான உழைப்புச் சக்தி இல்லை. ஆண்டிகுவா மற்றும் பார்புடா மிகவும் வறட்சியான நாடு. எனவே, நன்னீர் வினியோகம் மற்றும் குழாய் அமைப்பது தொடர்பான சிக்கலைத் தீர்க்கும் வகையில் சீனாவிடம் இருந்து உதவி கேட்டுக்கொண்டுள்ளோம். இவ்வாண்டின் ஜனவரி 24ஆம் நாள், குழாய்கள் பொருத்துதல் மற்றும் நன்னீர் விநியோகத்தை அதிகரிப்பது தொடர்பான ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம். அதன்படி, தண்ணீர் வினியோகப் பிரச்சினைக்கு சீனா உதவிகளை வழங்கும்.

இதனால் எங்கள் நாட்டின் தானிய உற்பத்தி அதிகரிப்பதோடு, உணவுப் பாதுகாப்பு குறிப்பிட்ட அளவிற்கு உயர்நிலையை அடைய முடியும் என்று குறிப்பிட்டார்.

Please follow and like us:

You May Also Like

More From Author