மணிக்கு 400 கி.மீ. ஓடும் அதிவேக ரயிலை ஆராய்ந்து வரும் சீனா

Estimated read time 0 min read

மணிக்கு 400 கி.மீ. ஓடும் அதிவேக தொடர்வண்டியைச் சீனா ஆராய்ந்து கொண்டிருக்கிறது. சி.ஆர்.450 என அழைக்கப்படும் இந்தப் புதிய தொடர்வண்டி மாதிரி இவ்வாண்டுக்குள் தயாரிக்கப்பட உள்ளது என்று அண்மையில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்வண்டியானது மணிக்கு 400 கி.மீ. என்ற உயர் வேகத்தில் இயங்குவதற்கு ஏற்ற வகையில், இருப்புப் பாதை, பாலம், சுரங்கப் பாதை உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் சார்ந்த தொழில்நுட்பங்களையும் ஆய்வாளர்கள் புத்தாக்கம் செய்துள்ளனர்.

சி.ஆர்.450 தொடர்வண்டியானது, 2017ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட சி.ஆர்.400 ரக அதிவேக தொடர்வண்டியை அடுத்து, மற்றொரு தொழில்நுட்ப முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. இத்தொடர்வண்டி பயன்பாட்டிற்கு வந்தபிறகு, தொடர்வண்டி ஓடும் வேகம் மணிக்கு 350 கி.மீ இல் இருந்து 400. கி.மீ. ஆக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author