மாவோ சேதுங்கை நினைவுக் கூரும் முக்கியத்துவம்

ஒவ்வோரு ஆண்டும் மாவோ சேதுங் பிறந்த நாளில், சீனாவின் பல்வேறு இடங்களில் வெவ்வேறு வழிமுறையில் அவருக்கு மரியாதை செலுத்தப்படுகிறது.

இவ்வாண்டு மாவோ சேதுங்கின் 130ஆவது பிறந்த நாளாகும். இதை முன்னிட்டு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி இதற்கான நினைவுக் கூட்டத்தை நடத்தியது.

இதில் ஷிச்சின்பிங் கூறுகையில், நாட்டின் நவீனமயமாக்கம் மற்றும் தேசத்தின் மறுமலர்ச்சியை முன்னேற்றுவது என்பது, மாவோ சேதுங் உள்ளிட்ட முன்னோடிகளால் நிறைவேற்றப்படாத இலட்சியம் ஆகும்.

இந்நிலையில், அவரால் தொடங்கி வைக்கப்பட்ட இலட்சியத்தைத் தொடர்ந்து முன்னுக்கு எடுத்து செல்வது, மாவோ சே துங்கை நினைவுக் கூர்வதற்கான மிக சிறந்த வழிமுறையாகும்.
மக்களுக்கு சேவை புரிவது சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் குறிக்கோள் மற்றும் நோக்கமாகும் என்று மாவோ சே துங் முன்மொழிந்தார்.

இதுவே, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நீண்ட காலமாகவே ஆட்சி புரிவதற்கான திறவுகோல் ஆகும். மக்களுக்கு சேவை புரிவது சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சாசனத்திலும் சீன அரசியல் அமைப்பு சட்டத்திலும் எழுதப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குறிக்கோளைப் பின்பற்றி வரும் அடிப்படையில், மக்களுக்கு சேவை புரிவதென்ற சிந்தனையின் வளர்ச்சியாக, மக்கள் மையம் என்ற சிந்தனையை ஷிச்சின்பிங் உருவாக்கியுள்ளார். மாவோ சேதுங்கின் 130வது பிறந்த நாளுக்கான நினைவுக் கூட்டத்தில் ஷிச்சின்பிங் கூறுகையில்,

சீன நவீனயமாக்கமானது, சீன மக்கள் அனைவரும் பாடுபட்டு வருதற்கான லட்சியமாகும் என்று சுட்டிக்காட்டினார். மிகப் பரந்த அளவிலான மக்களின் அடிப்படை நலன்களை பேணிக்காத்து, அவர்களுக்கு நன்மை அளிப்பதை அனைத்து பணிகளின் துவக்கமாகவும் இலக்காகவும் கொண்டு செயல்பட வேண்டும்.

நவீனமயமாக்க போக்கில் மேலதிக சாதனைகளை நியாயமான முறையில் அனைவருக்கும் பயனடைய செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author