யீசின்ஓ” என்னும் சீன-ஐரோப்பிய சரக்கு தொடர்வண்டி சேவையின் புதிய சாதனைகள்

சீனாவின் யீவூ நகரிலிருந்து ஸ்பெனின் மாட்ரிட் நகருக்குச் செல்கின்ற “யீசின்ஓ” என்னும் சீன-ஐரோப்பிய சரக்கு தொடர்வண்டி சேவையின் மூலம் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட கொல்கலன்களின் எண்ணிக்கை இதுவரை 1 லட்சத்து 88 ஆயிரத்தைத் தாண்டி, 2022ஆம் ஆண்டின் மொத்த எண்ணிக்கையை விட அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சூரிய ஆற்றல் ஒளிமின்னழுத்த பலகைகள், வாகனங்கள் மற்றும் உதிரி பாகங்கள், கைப்பேசிகள் உள்ளிட்ட உயர் மதிப்புள்ள பொருட்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
2014ஆம் ஆண்டு இத்தொடர்வண்டி சேவை துவங்கியது முதல் இதுவரை, 50க்கும் மேலான நாடுகள் மற்றும் பிரதேசங்களிலுள்ள 160க்கும் மேலான நகரங்களுக்குச் செல்லும் 25 வழித்தடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
தவிரவும், 2023ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில், இந்தத் தொடர்வண்டி சேவையின் மூலம் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட சரக்குகளின் மதிப்பு 4546 கோடி யுவானை எட்டி, 2022ஆம் ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 14.3 விழுக்காடு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author