யூ எச் டீ முன்மாதிரி மண்டலக் கட்டுமானம் துவக்கம்

சீன ஊடகக் குழுமத்தின் யூ எச் டீ முன்மாதிரி மண்டலம் டிசம்பர் 23ம் நாள் பெய்ஜிங்கில் கட்டியமைக்கத் துவங்கப்பட்டது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், பெய்ஜிங் நகராட்சிக் கட்சிக் கமிட்டியின் செயலாளருமான யீன் லீ, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறையின் துணை தலைவரும், சீன ஊடகக் குழுமத்தின் தலைவருமான ஷென்ஹாய்ஷொங் முதலியோர், இத்துவக்க விழாவில் கலந்து கொண்டனர்.


ஷென்ஹாய்ஷொங் கூறுகையில், யூ எச் டீ முன்மாதிரி மண்டலக் கட்டுமானம், சீன ஊடகக் குழுமம், பெய்ஜிங் மாநகர் ஆகியவற்றின் ஒத்துழைப்பில் மேற்கொள்ளப்பட்ட வானொலி, திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களின் ஒருங்கிணைப்புக்கும் உயர் தர வளர்ச்சிக்கும் தலைமை தாங்கும் ஒரு முக்கிய திட்டப்பணியாகும்.

இரு தரப்பும், மேலதிக யூ எச் டீ படைப்புகளைத் தயாரித்து, இத்துறையின் வளர்ச்சியைத் தொடர்ந்து முன்னெடுக்கும் என்று தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author