ரஷியத் தலைமை அமைச்சருடன் ஷிச்சின்பிங் சந்திப்பு

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ரஷியத் தலைமை அமைச்சர் மிகைல் விளாடிமிரோவிச் மிஷுஸ்டினை 20ஆம் நாள் பெய்ஜிங்கில் சந்தித்துரையாடினார்.


சந்திப்பின் போது ஷிச்சின்பிங் சுட்டிக்காட்டுகையில், சீன-ரஷிய உறவை நன்கு பேணிக்காத்து வளர்ப்பது, இரு நாட்டு மக்களின் அடிப்படை நலன்களின் அடிப்படையில், இரு தரப்புகள் எடுத்துக்கொண்ட நெடுநோக்குத் தேர்வாகும்.

சொந்தமாக தேர்ந்தெடுத்த வளர்ச்சிப் பாதையில் ரஷிய மக்கள் நடந்து செல்வதற்கு சீனா ஆதரவளிக்கும். அடுத்தாண்டு, சீன-ரஷிய தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 75ஆவது ஆண்டு நிறைவாகும். இதனைப் புதிய துவக்கமாகக் கொண்டு, தத்தமது பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியை முன்னெடுத்து தேசிய மறுமலர்ச்சியை நனவாக்குவதென்ற முன்னேற்றப் போக்கில் ரஷியாவுடன் இணைந்து கூட்டாக முன்னேறச் சீனா விரும்புகிறது என்று தெரிவித்தார்.


மிஷுஸ்டின் கூறுகையில், இவ்வாண்டு அரசுத் தலைவர் புதின் மற்றும் சீன அரசு தலைவர் ஷிச்சின்பிங்கிடையே 2 சந்திப்புகள் நடந்தன. பன்முக நெடுநோக்கு ஒருங்கிணைப்புக் கூட்டாளியுறவை ஆழமாக்குவதற்கான இரு தரப்புகளின் உறுதியான விருப்பதை இது வெளிகாட்டியுள்ளது.

இரு நாடுகளுக்கிடையே உள்ள பயனுள்ள ஒத்துழைப்புகள் சீராக அதிகரித்து வருவது ரஷியாவுக்கு மிகவும் மனநிறைவை தந்துள்ளது. சீனாவுடன் இணைந்து உள்ளார்ந்த ஆற்றலை மேலும் வெளிக்கொணர்ந்து பொருளாதார வர்த்தகம், எரியாற்றல், ஒன்றுடன் ஒன்று இணைப்பு முதலிய துறைகளிலுள்ள ஒத்துழைப்பை மேலும் விரிவாக்க ரஷியா விரும்புகிறது என்றார்.

Please follow and like us:

You May Also Like

More From Author