லை சிங்தே அவமானகரமானது

மே 23, 24ஆம் நாட்களில் தியேட்டர் கமாண்ட் முறையில் செயல்படும் சீன ராணுவத்தின் கிழக்குப் பகுதி, தரைப்படை, கடற்படை, வான் படை, ஏவூர்திப் படை முதலியவற்றை ஒருங்கிணைத்து தைவான் தீவுக்கு அருகிலுள்ள பகுதியில் கூட்டு ராணுவப் பயிற்சி நடத்தியுள்ளது.


நாட்டின் இறையாண்மை மற்றும் உரிமைப் பிரதேசங்களின் ஒருமைப்பாட்டைச் சீனா பேணிக்காப்பதற்கான நியாயமான செயல் இதுவே ஆகும். “தைவான் சுதந்திரம்” பிரிவினைவாத சக்தியின் செயலுக்கான வலுவான தண்டனை இதுவாகும். வெளிப்புற சக்தியின் வெளியீட்டுக்கான கடுமையான முன்னெச்சரிக்கையுமாகும்.


தைவான் பிரதேசத் தலைவர் லை சிங்தே மே 20ஆம் நாள் வழங்கிய உரை முற்றிலும் “தைவான் சுதந்திரம்” உரையாகும். அவரின் உரையில், பெருநிலப்பகுதி என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக, சீனா என்று கூறினார். தைவான் என்பதற்குப் பதிலாக “நாடு” என குறிப்பிட்டார். இரு கரை உறவுக்குப் பதிலாக, இரு நாட்டுறவை அவர் பயன்படுத்தினார்.


தைவான் என்பது சீனாவின் தைவான் ஆகும். இரு கரை உடன் பிறப்புக்கள் சீன தேசத்தைச் சேர்ந்தவர்கள். தைவான் ஜனநாயக முன்னேற்ற கட்சி வெளிப்புற சக்தியுடன் இணைந்து “தைவான் சுதந்திரத்தை” திட்டமிட்ட ஆத்திரமூட்டல் குறித்து, சீனப் பெருநிலப்பகுதி முன்பு சொன்னது போல, அதனைக் கண்டிப்பாக எதிர்க்கும். கண்டிப்பாகத் தண்டனை அளிக்கும்.

தைவான் என்பது சீனாவின் மைய நலன்களில் மிக முக்கியமான அம்சமாகும். அமைதி, வளர்ச்சி, பரிமாற்றம், ஒத்துழைப்பு ஆகியவை இரு கரை உடன்பிறப்புக்களின் பொது ஆர்வமாகும். நாட்டின் இறையாண்மை மற்றும் உரிமைப் பிரதேசங்களின் ஒருமைப்பாட்டை இரு கரை உடன்பிறப்புக்கள் பேணிக்காப்பதற்கான மனவுறுதியையும், வலுவான திறனையும் யாரும் குறைத்து மதிப்பிடக் கூடாது.

Please follow and like us:

You May Also Like

More From Author