வசந்தவிழா கலைநிகழ்ச்சியுடன் சீனப் புத்தாண்டு வரவேற்பு

Estimated read time 1 min read

பிப்ரவரி 9ஆம் நாள் சீனச் சந்திர நாட்காட்டியின்படி டிராகன் ஆண்டின் புத்தாண்டுக்கு முந்தைய இரவாகும். இந்நாளில் இரவு 8 மணிக்கு, சீன ஊடகக் குழுமம் தயாரித்த வசந்த விழா கலை நிகழ்ச்சி உலகப் பார்வையாளர்களுக்கு ஒளிப்பரப்பு செய்யப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டின் வசந்த விழா கலை நிகழ்ச்சி, மக்களின் வசந்த விழா கலை நிகழ்ச்சி என்ற கோட்பாட்டைப் பின்பற்றி, சீனாவில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மக்கள் “வசந்த விழா கலை நிகழ்ச்சியின் முக்கிய “கதா பாத்திரமாக மாறியுள்ளனர். இதில், ஓய்வு பெற்ற தொழில் நுட்ப பணியாளர்கள், காவற்துறையினர், சென் சோ 17 விண்கலத்தின் விண்வெளி வீரர்கள், அறிவியல் ஆராய்ச்சி பணியாளர்கள் முதலிய துறைசார் பிரதிநிதிகளும் அடங்கினர். 

இந்த “வசந்த விழா கலை நிகழ்ச்சியைப்” பார்ப்பது 5,000 ஆண்டுகள் வரலாறுவடைய சீன நாகரிகத்தின் அழகைக் கண்டுரசிக்கும் பண்பாட்டுப் பயணமாகும்.

இந்த ஆண்டின் “வசந்த விழா கலை நிகழ்ச்சி” வி.பி. திரைப்பட தயாரிப்பு முறையை அறிமுகப்படுத்தி, எழில் மிக்க காட்சிகள் அளிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 9ஆம் நாள் இரவில், ஆறு கண்டங்களில் 49 நாடுகளைச் சேர்ந்த 90 நகரங்களில் இவ்வாண்டின் “வசந்த விழா கலை நிகழ்ச்சி”நேரடி ஒலிபரப்பு செய்யப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author