வசந்த விழா பயணி போக்குவரத்து மூலம் சீனப் பொருளாதார மீட்சி

Estimated read time 1 min read

 

இவ்வாண்டின் சீன வசந்த விழா பயணி போக்குவரத்து காலம், ஜனவரி 26ஆம் நாள் முதல் மார்ச் 5ஆம் நாள் வரை என 40 நாட்களாக நீடிக்கின்றது.

இந்த காலகட்டத்தில் 900 கோடி பயணங்கள் பிரதேசங்களைக் கடந்து மேற்கொள்ளப்படும் என்றும் இது 2023ஆம் ஆண்டை விட ஏறக்குறைய இரு மடங்காகும் என்றும் சீன போக்குவரத்துத் துறை எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளது.

வசந்த விழா பயணி போக்குவரத்து, சீனாவில் வேகமாக அதிகரித்த பயணிகளின் ஓட்டத்தை மட்டுமல்லாமல், சீனாவின் பொருளாதார மீட்சி கொண்டு வரும் நம்பிக்கையையும் உயிர்ச்சக்தியையும் பிரதிபலிக்கிறது என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

இந்த வசந்த விழா பயணி போக்குவரத்து புதிய சாதனையை உருவாக்கும். பயண வழியில் பல புதிய மாற்றங்கள் உள்ளன.

இணையம், பெரிய தரவு, செயற்கை நுண்ணறிவு முதலிய தொழில்நுட்பங்களின் வளர்ச்சி மற்றும் பயன்பாடு, வசந்த விழா பயணி போக்குவரத்தின் புதிய மாற்றங்களை ஏற்படுத்தின.

மேலும், சமூக பொருளாதாரத்தின் வளர்ச்சியுடன், புதிய பயண அனுபவத்தைப் பெற பயணிகள் விரும்புகின்றனர். சந்தையின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், சேவை முறைகளை புதுமைப்படுத்த அனைத்து தரப்புகளை இது தூண்டியுள்ளது.

சீனாவின் போக்குவரத்து உள்கட்டமைப்பின் மேம்பாடு மற்றும் பயணக் கருத்துகளின் மாற்றத்துடன், வசந்த விழா பயணிப் போக்குவரத்தின் இலக்கு மேலும் பன்முகப்படுத்தப்பட்டுள்ளது. 

இக்காலத்தில் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்வது மற்றொரு சிறப்பம்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author