வறுமையிலிருந்து விடுபட்டுள்ள பகுதிகளுக்கு நன்மை புரிந்த விற்பனை மேடை

சீனா மின்னணு வர்த்தக கூட்டுறவு நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, இவ்வாண்டின் ஆகஸ்டு 2ஆம் நாள் வரை, விறுமையிலிருந்து விடுபட்டுள்ள பகுதிகளில், வேளாண் மற்றும் துணைப் பொருட்களுக்கான இணைய விற்பனை மேடையான“832”என்னும் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள விநியோக நிறுவனங்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கும் மேலாகவும், கொள்வனவு நிறுவனங்களின் எண்ணிக்கை 6 லட்சத்துக்கும் மேலாகவும் உள்ளன.

இதன் மூலம் கிடைத்த மொத்த விற்பனை தொகை 4 ஆயிரம் கோடி யுவானைத் தாண்டியுள்ளது. 832 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 30 லட்சம் விவசாயக் குடும்பங்கள் வறுமையிலிருந்து விடுபட்டுள்ள சாதனைகளை வலுப்படுத்துவதற்கு இத்தளம் துணைப் புரிந்துள்ளது.


2020ஆம் ஆண்டு ஜனவரி முதல் நாள் இயங்கத் தொடங்கிய இம்மேடை, உயர் தர தொடரவல்ல வளர்ச்சியை முன்னேற்றும் நோக்கத்துடன், வறுமையிலிருந்து விடுபட்டுள்ள பகுதிகளிலுள்ள விவசாயக் குடும்பங்களுக்கு நன்மை புரிந்து, அங்குள்ள தரமான வேளாண் மற்றும் துணைப் பொருட்கள் நாட்டின் பெரிய சந்தையில் நுழைவதற்கு உதவியளித்து வருகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author