வெளிநாட்டு முதலீட்டாளர்களின் மிகச் சிறந்த தேர்வாக விளங்கும் சீனச் சந்தை

Estimated read time 0 min read

இவ்வாண்டு சீனச் சர்வதேச நுகர்வுப் பொருட்களின் கண்காட்சியில், சர்வதேசமயமாக்க நிலை புதிய உச்சத்தை மீண்டும் எட்டியுள்ளது. 71 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 4000க்கும் மேற்பட்ட தொழில் சின்னங்கள் இக்கண்காட்சியில் கலந்து கொண்டுள்ளன.

பிரிட்டன், மங்கோலியா, மலேசியா முதலிய நாடுகளைச் சேர்ந்த தொழில் நிறுவனங்கள் குழுவை வருக்கி இக்கண்காட்சியில் முதல் முறையாகக் கலந்து கொண்டுள்ளன.

இதுபற்றி சீனாவிற்கான பிரிட்டனின் துணை வர்த்தகத் தூதர் சோஹைல் ஷேக் கூறுகையில், சீனச் சந்தையானது வாய்ப்புகள் மற்றும் போட்டி நிறைந்த்து என்று குறிப்பிட்டார். மேலும், பிரிட்டனின் நிறுவனங்கள் இங்கு அனுபவங்களைக் கற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

சீனாவுடனான பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பில் உள்ளார்ந்த ஆற்றல் அதிகமாக உள்ளது என்று சீனாவுக்கான அயர்லாந்து தூதரகத்தின் வர்த்தக அலுவலர் ஜோசப் கீட்டிங் கூறினார்.
வெளிநாட்டு நிறுவனங்கலைப் பொறுத்தவரை, சீனாவின் பெரிய சந்தை கணிசமான வருமானத்தை குறிக்கிறது.

தற்போது, சீன நுகர்வு தொடர்ந்து விரிவாக்கி வருகின்றது. இவ்வாண்டின் முதல் காலாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பு வளர்ச்சியில் நுகர்வு 73.7% பங்கினை வகித்துள்ளது. ஜெர்மனியின் கார்ச்சர் நிறுவனம் கூறுகையில், இந்நிறுவனத்தைச் சேர்ந்த உற்பத்திப் பொருட்களின் விற்பனைத் தொகை சீனாவில் ஆண்டுதோறும் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது என கூறியது.
தற்போது சீனாவின் நடுத்தர வருமானக் குழு 40 கோடிக்கும் அதிகமான மக்களைக் கொண்டுள்ளது.

இந்தத் தொகை 2035ஆம் ஆண்டுக்குள் 80 கோடிக்கும் அதிகம் என்னும் நிலையை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தாலியின் டுகாட்டி மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனத்தின் சீனா தலைமை செயல் அதிகாரி லுகா பாட்டிலோரோ கூறுகையில், சீனச் சந்தை தொடர்ச்சியான வளர்ச்சியை நிலைநிறுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.


பல வெளிநாட்டு நிறுவனங்கள் கூறியது போல், பழைய நண்பராக இருந்தாலும் அல்லது புதிய விருந்தினராக இருந்தாலும், சீனச் சந்தை அவர்களின் மிக சிறந்த தேர்வாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

Please follow and like us:

You May Also Like

More From Author