புதிய காலத்தில் சீனத் தனிச்சிறப்பு வாய்ந்த சோஷலிசம் பற்றிய ஷிச்சின்பிங்கின் சிந்தனைகளின் கல்விக் நிகழ்ச்சிக்கான தொகுப்புக் கூட்டம்

புதிய காலத்தில் சீனத் தனிச்சிறப்பு வாய்ந்த சோஷலிசம் பற்றிய ஷிச்சின்பிங்கின் சிந்தனைகளின் கல்விக் நிகழ்ச்சிக்கான தொகுப்புக் கூட்டம் 4ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத் தலைவருமான ஷிச்சின்பிங் மத்திய அரசியல் குழுவின் கூட்டத்தில் இந்த தொகுப்பு அறிக்கையையும், இக்கல்வி நிகழ்ச்சியின் சாதனைகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து முன்மொழிவுகளையும் பரிசீலனை செய்து முக்கிய உரைநிகழ்த்தினார்.

அவர் வலியுறுத்துகையில், இந்தக் கல்வி நிகழ்ச்சியின் சாதனைகளை வலுப்படுத்தி அதைக் குறித்த முன்மொழிவுகளை நன்கு நடைமுறைப்படுத்தி நீண்டகால அமைப்பு முறையை உருவாக்க வேண்டும். மேலும், கட்சியின் கட்டமைப்பு மூலம், அடிமட்ட மேலாண்மைக்கு வழிகாட்டுவதை முன்னேற்ற வேண்டும். அடிமட்ட கட்சிக் குழுக்களின் பங்களிப்பு மற்றும் கட்சி உறுப்பினர்களின் முன்மாதிரி பங்களிப்பை முழுமையாக வெளிக்கொணர வேண்டும் என்றார்.

புதிய காலத்தில் சீனத் தனிச்சிறப்பு வாய்ந்த சோஷலிசம் பற்றிய ஷிச்சின்பிங்கின் சிந்தனைகளின் கல்வி நிகழ்ச்சி 2023ஆம் ஆண்டின் ஏப்ரலில் துவங்கியது. இதுவரை அடிப்படையாக நிறைவேற்றப்பட்டது.

Please follow and like us:

You May Also Like

More From Author