ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியிலுள்ள தனிச்சிறப்புடைய விளையாட்டுகள்

ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியிலுள்ள தனிச்சிறப்புடைய போட்டிகள் பற்றிய செய்தியாளர் கூட்டம் செப்டம்பர் 28ஆம் நாள் முக்கிய ஊடக மையத்தில் நடைபெற்றது.


நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டியின் 40 விளையாட்டுகளில், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இல்லாத 9 சிறப்பு விளையாட்டுகள் இடம்பெறுள்ளன. ஆசிய விளையாட்டுப் போட்டிக்கும், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கும் இடையிலான முக்கிய வித்தியாசம் இதுவாகும் என்று இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வூசு, செபக்டக்ராவ், கிரிக்கெட, குராஷ், ஜியூஜிசு, ஸ்கேட்போர்டு, பாறை ஏறுதல், ஸ்குவாஷ், அறிவுத்திறமை விளையாட்டு ஆகியவை, இந்த 9 விளையாட்டுகளில் இடம்பெறுகின்றன.


மேலும், நிலா விழா மற்றும் சீனத் தேசிய விழாவில், சீனப் பாரம்பரிய பண்பாடு பற்றிய நிகழ்ச்சிகளும் ஊடக மையத்தில் நடைபெறவுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author