ஹேபெய் இரும்புருக்கு குழுமத்துக்கும் செர்பியா எஃகு நிறுவனத்துக்கும் இடையே கைகுலுக்கல்

செர்பியாவின் தலைநகரான பெல்கிரேட்டின் தென்கிழக்கிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் 1 லட்சம் மக்கள் தொகை கொண்ட சிறு நகரான ஸ்மேடெரோவோ அமைந்துள்ளது.

அங்கே 1913ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஸ்மெடெரோவோ எஃகு தொழிற்சாலை தனது சிறந்த காலத்தில் இந்நகரின் நிதி வருமானத்தில் 40 விழுக்காடு பங்கு வகித்தது. ஆனால், செர்பியாவின் பெருமை என போற்றப்பட்ட இத்தொழிற்சாலை, தீவிரமான சந்தைப் போட்டி, திறமையற்ற மேலாண்மை ஆகிய காரணங்களால் திவால் விளிம்பில் சிக்கியது.

செர்பிய அரசு இதற்கு சர்வதேச ஏலம் விடும் நடவடிக்கையை பல முறை நடத்திய போதிலும் தோல்வியடைந்தது.
இத்தொழிற்சாலையில் பணிபுரிந்த 5000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் என்ன செய்வது என தெரியாமல் அல்லல்பட்ட போது, 2016ஆம் ஆண்டு ஏப்ரல், HBIS எனப்படும் சீன ஹேபெய் இரும்புருக்கு குழுமம் முதலீட்டுடன் HBIS செர்பிய எஃகு நிறுவனத்தை நிறுவியது.

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவுக்கு ஆதரவளிக்கும் வகையில், செர்பியாவுடன் இத்தகைய ஒத்துழைப்பு மேற்கொள்ள இக்குழுமம் தீர்மானித்தது.
செர்பிய எஃகு நிறுவனம் உருவாக்கப்பட்ட 2 மாதங்களுக்குப் பிறகு, அதாவது 2016ஆம் ஆண்டு ஜுன் 19ஆம் நாள், 100 ஆண்டுகால வரலாறுடைய தொழிற்சாலையில், முக்கியமான விருந்தினர் ஒருவர் வரவேற்கப்பட்டார்.

அந்த நாளில் தொழிற்சாலையின் பணியாளர்கள், அவர்களின் குடும்பத்தினர்கள், ஸ்மெடெரோவோ நகரவாசிகள் ஆகிய ஆயிரக்கணக்கானோர் ஒன்றுகூடி, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கை வரவேற்றனர். அப்போது ஷி ச்சின்பிங் உற்சாகமாக உரை நிகழ்த்துகையில், சீன-செர்பிய தொழில் நிறுவனங்களின் ஒத்துழைப்பு மூலம், இருநாட்டு உற்பத்தி திறன் சார் ஒத்துழைப்புக்கான புதிய அத்தியாயம் திறந்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இத்தொழிற்சாலையின் பணியாளர் உணவகத்தில் ஷி ச்சின்பிங் தொழிலாளர்களுடன் இணைந்து தேனீர் அருந்தி உரையாடினார். மேலும், ஸ்மெடெரோவோ எஃகு தொழிற்சாலையின் நிழல் உருவத்தின்படி அவர்கள் தயாரித்த நினைவு பதக்கம் அன்பளிப்பாக ஷி ச்சின்பிங்கிற்கு வழங்கப்பட்டது.

இரும்புருக்கினால் தயாரிக்கப்பட்ட இந்த நினைவுப் பதக்கம், தற்போது சீன-செர்பிய நட்புறவின் சின்னமாக இருப்பதோடு, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவு மூலம் ஸ்மெடெரோவோ எஃகு தொழிற்சாலை மீண்டும் உயிராற்றல் பெற்ற கதையையும் பதிவு செய்துள்ளது.


சீனத் தரப்பு வழங்கிய முன்னேறிய மேலாண்மை மற்றும் தொழில் நுட்பங்களுடன், செர்பிய எஃகு நிறுவனம் உலகளாவிய தொழில் நிறுவனமாக மாறியுள்ளது. 2016ஆம் ஆண்டின் இறுதியில், இந்நிறுவனம் லாபம் பெறத் துவங்கியது. உலகளவில் முன்னேறிய தொழில் நுட்பங்களைத் தொடர்ந்து உட்புகுத்தி வரும் தொழிற்சாலை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை தயாரிப்பு ஆகிய துறைகளில் ஐரோப்பாவில் முன்னணியை எட்டியுள்ளது.


ஹேபெய் இரும்புருக்கு குழுமத்தைச் சேர்ந்த செர்பிய எஃகு நிறுவனத்தின் தொழிலாளர் என்பது, வெற்றியின் அடையாளம் என்று இந்நிறுவனத்தைச் சேர்ந்த பணியாளர் போபன் தோடொரோவிக் கூறினார்.


ஹேபெய் இரும்புருக்கு குழுமத்தைச் சேர்ந்த செர்பிய எஃகு நிறுவனம், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கட்டுமானத்திலும், பொருளாதாரத்தின் உலகமயமாக்கத்திலும் ஆக்கப்பூர்வமாக கலந்து கொண்டு, ஐரோப்பாவில் போட்டியாற்றல் மிக்க எஃகு தொழில் நிறுவனத்தின் உருவாக்கத்தை விரைவுபடுத்தி, சர்வதேச உற்பத்தி திறன் சார் ஒத்துழைப்பில் முன்மாதிரியாகத் திகழ்கிறது.


ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவின் ஆதரவுடன், சீன-செர்பிய ஒத்துழைப்பில் அதிக சாதனைகள் பெறப்பட்டுள்ளன. செர்பிய பொருளாதாரம் தொடர்ந்து பல ஆண்டுகளாக ஐரோப்பாவின் முன்னணியில் இருக்கிறது. உள்ளூர் மக்களைப் பொறுத்தவரை, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்பது, நட்புறவின் இணைப்பாகவும் நம்பத்தக்க எதிர்காலமாகவும் உள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author