2023ஆம் ஆண்டு உலக மனித இயந்திர மாநாடு பெய்ஜிங்கில் துவக்கம்

2023ஆம் ஆண்டின் உலக மனித இயந்திர மாநாடு ஆகஸ்டு 16ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது.
கருத்தரங்கு, உலக மனித இயந்திரப் பொருட்காட்சி, உலக மனித இயந்திரப் போட்டி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இம்மாநாட்டின்போது நடத்தப்படுகின்றன.

திறப்பு மற்றும் கூட்டுக் கட்டுமானம், கல்வி வழிக்காட்டல், தொழில் துறை வளர்ச்சி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இம்மாநாட்டின் கருத்தரங்கில், சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள், மூத்த அறிஞர்கள், சீனா மற்றும் வெளிநாடுகளின் புகழ்பெற்ற நிபுணர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் உள்ளிட்ட 320க்கும் மேலானோர் பங்கெடுத்துள்ளனர்.


மேலும், சீனா மற்றும் வெளிநாடுகளின் 160 மனித இயந்திர நிறுவனங்கள் சுமார் 600 உற்பத்திப் பொருட்களுடன் இம்மாநாட்டுக்கான பொருட்காட்சியில் கலந்து கொண்டுள்ளன. அவற்றின் 60 புதிய உற்பத்திப் பொருட்கள் உலகளவில் முதன்முறையாக வெளியிடப்பட உள்ளன.

Please follow and like us:

You May Also Like

More From Author