6 நாடுகளுக்கான விசா இல்லா கொள்கையின் சாதனை

பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின், மலேசியா ஆகிய 6 நாடுகளின் மக்களுக்கு விசா இல்லா கொள்கையைச் சீனா டிசம்பர் முதல் நாள் மேற்கொள்ளத் துவங்கியது.

சீனத் தேசிய குடியேற்ற நிர்வாகம் வெளியிட்ட தரவுகளின்படி, டிசம்பர் 1 முதல் 3ஆம் நாள் வரை, இந்த 6 நாடுகளைச் சேர்ந்த சுமார் 18 ஆயிரம் பேர் சீனாவில் பயணம் மேற்கொண்டனர். அவர்களில் சுமார் 7 ஆயிரம் பேர் விசா இல்லா கொள்கையின் மூலம் சீனாவுக்கு வந்துள்ளனர்.


இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் 5ஆம் நாள் கூறுகையில், இந்தக் கொள்கை ஆக்கப்பூர்வச் சாதனைகளைப் பெற்று, 6 நாட்டு மக்களுக்கு உண்மையான வசதியை வழங்கியுள்ளதை இத்தரவுகள் வெளிப்படுத்தியுள்ளன.

அடுத்த கட்டத்தில், விசா கொள்கையைத் தொடர்ந்து மேம்படுத்தி, சீன-வெளிநாட்டு மக்களின் தொடர்புக்கு மேலதிக வசதிகளை வழங்கும் என்றார்.

Please follow and like us:

You May Also Like

More From Author