9ஆவது சீன-தென்கொரிய-ஜப்பான் தலைவர்கள் கூட்டம்

சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங் மே 27ஆம் நாள் காலை சியோலில், தென் கொரிய அரசுத் தலைவர் யோன் சுக் யொல், ஜப்பானிய தலைமையமைச்சர் ஃபூமியோ கிஷிடா ஆகியோருடன், 9ஆவது சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்றார்.

அதில் மூன்று நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு குறித்து ஐந்து அம்சங்களை லீச்சியாங் முன்வைத்தார். முதலாவது, ஒத்துழைப்பின் விரிவான மறுதொடக்கத்தை முன்னெடுத்தல், இரண்டாவது, பொருளாதார மற்றும் வர்த்தகத் துறையில் ஒன்றுக்கொன்று இணைப்பை ஆழமாக்குதல், மூன்றாவது, அறிவியல் தொழில் நுட்ப புத்தாக்கத்தின் ஒத்துழைப்புக்கு வழிகாட்டுதல், நான்காவது, மானுட பரிமாற்றத்தை அதிகரித்தல், ஐந்தாவது, தொடரவல்ல வளர்ச்சி, குறைந்த கார்பன் வளர்ச்சி, காலநிலை மாற்றம், முதுமை மயமாக்கம் மற்றும் தொற்று நோயைச் சமாளிப்பதற்கான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் ஆகியவை இடம்பெற்றன.

மூன்று நாடுகள் இந்தக் கூட்டத்தை புதிய தொடக்க புள்ளியாகக் கொண்டு, ஒத்துழைப்பின் நிலைப்புத்தன்மை மற்றும் தொடர்ச்சி தன்மையை நிலைநிறுத்த வேண்டும் என்று தென் கொரிய மற்றும் ஜப்பானிய தலைவர்கள் விருப்பம் தெரிவித்தனர்.

கூட்டத்துக்குப் பின் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் லீச்சியாங் கூறுகையில், தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகியவற்றுடன், மூன்று தரப்புக்கிடையேயான ஒத்துழைப்பு சீராகவும் நீண்டகாலமாகவும் இருப்பதை முன்னேற்ற விரும்புவதாக தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author