இண்டி கூட்டணி 2024 தேர்தலுக்கு இருக்காது! – அண்ணாமலை

Estimated read time 1 min read

முன்னாள் அமைச்சர் பொன்முடி வழக்கிற்கும், பாஜகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனப் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலைத்தில் இருந்து பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி பயணம் மெற்கொண்டார்.

விமான நிலைத்தில் செய்தியாளரை சந்தித்த அண்ணாமலை,

கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து அப்பீல் செய்யப்பட்டு கடைசியாக தீர்ப்பு வந்துள்ளது. கொஞ்சம் தாமதமாக வந்தாலும் நல்ல தீர்ப்பு. தமிழக பா.ஜனதா சார்பில் வரவேற்கிறோம்.

இதன்மூலம் ஊழல் இல்லாத சமுதாயத்தை படைப்பதற்கு இந்த தீர்ப்பு படிக்கல்லாக அமையும். ஏற்கனவே ஊழல் வழக்கில் சிக்கி செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக புழல் ஜெயிலில் இருக்கிறார். இந்தியாவே பார்த்து கொண்டிருக்கிறது.

இப்போது தி.மு.க.வின் மூத்த அமைச்சர் பொன்முடி தண்டனை பெற்றுள்ளார். இதே பட்டியலில் இன்னும் சில அமைச்சர்கள் இருக்கிறார்கள். இது ஆரம்பம்தான். அடுத்த ஆண்டு மத்தியில் இன்னும் சிலருக்கும் தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தமிழகத்தில் வெற்றி வாய்ப்பு நன்றாக இருக்கிறது.

டெல்லியில் மத்திய அமைச்சர்கள் சந்திக்க இருப்பதாக தெரிவித்தார். தமிழகத்தில் வெள்ள பாதிப்புகளில் மீட்பு பணிகளை மேற்கொண்டோம்.

எல்லாவற்றுக்கும் பிரதமர் மோடி வர வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. பிரதமரை பொறுத்தவரை எங்க தேவையோ அங்கே வருகிறார் பிரதமர் மோடி.

முதல்வர் ஸ்டாலின் வேறொரு காரணத்துக்காக டெல்லி சென்று இருந்தாலும், பிரதமர் மோடி அவரை இரவு பத்தரை மணிக்கு சந்தித்தார்.

பிரதமர் மோடி வெள்ள பாதிப்புகள் குறித்து மூத்த அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டவரிடம்  கேட்டு அறிந்து கொள்கிறார்.

பொன்முடியை அடுத்து மூன்று அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.,  தங்கம் தென்னரசு, பொன்முடி, உள்ளிட்டோரின் வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. 33 சதவீத திமுக அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு உள்ளது.

டெல்லியில் நடைபெற்ற இண்டி கூட்டணியின் நான்காவது கூட்டத்தில் இந்தி பேச்சை மொழிபெயர்க்குமாறு கூறிய திமுக எம்.பி டி.ஆர்.பாலுவிடம் பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் ஆவேசம் அடைந்ததார். மேலும் முதல்வர் நிதிஷ்குமார் பத்து நிமிடம் இது  குறித்து வாக்குவாதம் நடத்தினார். இப்படி இருக்கும் சூழலில் இண்டி கூட்டணி 2024 தேர்தலுக்கு இருக்காது.

காங்கிரஸ் கூட்டணி தோற்றதற்கு காரணமே திமுக தான். இதில்  திமுகவிற்கு 40% ஊழல் வழக்கு உள்ளது. மீண்டும் இண்டி கூட்டணி திமுகவால் உடையும்.

பிரதமர் மோடி காசி தமிழ் சங்கத்தில் பேசியதை உடனடியாக தமிழில் மொழி பெயர்த்து வழங்கப்பட்டது. ஆனால் சாதாரண இண்டி கூட்டணியில் இந்தி மொழிபெயர்ப்பை ஒத்துக்கவில்லை.

திமுக அமைச்சர்கள் மீது உள்ள வழக்குகளின் முடிவுக்கும் பாஜகவிற்கும் எந்த சம்மந்தம் இல்லை.

நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்யக்கூடாது என விதிமுறைகள் உள்ளதா?,

1989 ஆம் ஆண்டு 89 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.  தற்போது தான் மீண்டும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்கள்.

திமுக அரசு மழை வெள்ளத்தைப் சரியாக கையாளவில்லை. தென் மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நிவாரணத்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆவார் இது உறுதி எனத் தெரிவித்தார்.

நீதிமன்றத்தையும் ஆளும் கட்சியையும் சம்பந்தப்படுத்தி பேசுபவர்கள் அரசியலில் இருக்கவே லாயக்கில்லாதவர்கள்.

பா.ஜனதாவில் சேருபவர்கள் மட்டும் விமோசனம் அடைவதாக கூறுவது தங்கள் மீதான பிரச்சினைகளை மக்களிடம் இருந்து திசை திருப்புவதற்குத்தான் எனத் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author