ஈரோட்டில் சதமடித்த வெயில்: தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம் – வானிலை மையம் சொல்வது என்ன?

Estimated read time 1 min read

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில், 39.8 டிகிரி செல்சியஸ் (103.64 பாரன்ஹீட்) வெப்பம் பதிவாகி உள்ளது.

வரும் 2 மற்றும் 4-ஆம் தேதிகளில், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், வறண்ட வானிலை நிலவக்கூடும்.

தமிழகத்தில் ஓரிரு இடங்களில், அதிகபட்ச வெப்பநிலை அடுத்த ஐந்து தினங்களில் 2 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்த வரை, அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author