ஐயா துரை. ராமசாமி ஆற்றிய பணி போற்றுதலுக்குரியது! – அண்ணாமலை

Estimated read time 1 min read

தமிழக முன்னாள் அமைச்சர் ஐயா துரை. ராமசாமி மறைவு, நேரில் சென்று பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை அஞ்சலி செலுத்தினார்.

இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,

தமிழக முன்னாள் அமைச்சரும், தமிழக பாஜக மாநிலப் பொதுக் குழு உறுப்பினர் சகோதரி உஷாதேவி அவர்களின் தந்தையாருமான, மதிப்பிற்குரிய ஐயா துரை. ராமசாமி அவர்கள் இல்லத்திற்குச் சென்று, அவரது பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வணங்கினோம்.

தமிழக முன்னாள் அமைச்சரும், @BJP4Tamilnadu மாநிலப் பொதுக் குழு உறுப்பினர் சகோதரி உஷாதேவி அவர்களின் தந்தையாருமான, மதிப்பிற்குரிய ஐயா துரை. ராமசாமி அவர்கள் இல்லத்திற்குச் சென்று, அவரது பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வணங்கினோம்.

ஐந்து முறை வெள்ளக்கோவில் சட்டமன்ற… pic.twitter.com/WH3fTNWrrs

— K.Annamalai (@annamalai_k) December 24, 2023

ஐந்து முறை வெள்ளக்கோவில் சட்டமன்ற உறுப்பினராகவும், ஊராட்சி மன்றத் தலைவராகவும் ஐயா துரை. ராமசாமி அவர்கள் ஆற்றிய பணி போற்றுதலுக்குரியது. அவர் உடல் நம்மை விட்டுப் பிரிந்தாலும், அவர் ஆற்றியுள்ள மக்கள் பணிகள் என்றும் அவர் புகழைக் கூறும்.

இந்தத் துயரமான நேரத்தில், அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தமிழக பாஜக சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருப்பாதங்களை அடைய வேண்டிக் கொள்கிறேன் எனத“ தெரிவித்துள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author