கோவளம் முதல் மாமல்லபுரம் வரை போக்குவரத்து மாற்றம்!

Estimated read time 1 min read

கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளின் ஒரு பகுதியாக, ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவினருக்கான சைக்கிளிங் போட்டி கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற உள்ளதால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கேலோ இந்தியா (Khelo India) விளையாட்டு போட்டிகள் 2024 தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவினருக்கான சைக்கிளிங் போட்டி கிழக்கு கடற்கரை சாலையில் கோவளம் முதல் மாமல்லபுரம் பகுதிகளில்  நாளை (27.01.2024) மற்றும் நாளை மறுநாள் (28.01.2024) நடைபெறுகிறது.

எனவே, கிழக்கு கடற்கரை சாலையில் கோவளம் முதல் மாமல்லபுரம் வரை  போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  பொதுமக்கள் தங்கள் பயணத்திற்கு பூஞ்சேரி, திருப்போரூர், கேளம்பாக்கம் (OMR) வழியை பயன்படுத்தி கொள்ளலாம் என்று காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author