சிலம்பத்தை காண ஆர்வமாக உள்ளேன் – பிரதமர் மோடி

Estimated read time 0 min read

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பத்தை காண  ஆர்வமாக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று  வரும் கேலோ இந்தியா விளையாட்டு போட்டி தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் பிரதமர் மோடி, போட்டியை முறைப்படி தொடங்கி வைத்தார்.

பின்னர்  வணக்கம் சென்னை என்றும், அருமை உடைத்தென்று அசவாமை வேண்டும், பெருமை முயற்சி தரும் என்ற திருக்குறளையும் மேற்கோள்காட்டி  தனது உரையை தொடங்கினார். 2024ம் ஆண்டில் விளையாட்டுத் துறைக்கு சிறப்பான  தொடக்கமாக கேலோ இந்தியா விளையாட்டு போட்டி அமைந்துள்ளது.

தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பத்தை காண ஆர்வமாக இருக்கிறேன். சென்னைக்கு வந்தது சொந்த ஊருக்கு வந்ததுபோல இருக்கிறது. விளையாட்டுத்துறையில் சாம்பியன்களை உருவாக்கும் பூமியாக தமிழ்நாடு திகழ்கிறது. விளையாட்டில் சாதனை படைக்கும் நாடாக இந்தியாவை மாற்ற விரும்புகிறேன் என்றார்.

வீரர்களின் திறமைகளை வெளியப்படுத்த கேலோ இந்தியா உதவும். 2024ல்  விளையாட்டுத் துறைக்கு சிறந்த தொடக்கமாக கேலோ இந்தியா அமைந்துள்ளது.
அதிகளவில் விளையாட்டுப் போட்டிகளை நடத்தி, சிறந்த வீரர்களை உருவாக்க வேண்டும். தமிழ்நாட்டில் சிறந்து விளையாட்டு வீரர்கள் உள்ளனர்.

தமிழ்நாடு சாம்பியன்களை உருவாக்கும் பூமி.விளையாட்டு துறையில் சாதனை படைக்கும் நாடாக இந்தியாவை மாற்ற நினைக்கிறேன். இளைஞர்களின் முன்னேற்றம் குறித்து திருவள்ளுவர் திருக்குறளில் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிய போட்டிகளில் இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது. ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக்கில் இந்தியா சாதனை படைத்துள்ளது. 2036ல் இந்தியாவில் ஒலிம்பிக்  போட்டிகளை நடத்த முயற்சி எடுத்து வருகிறோம். விளையாட்டுகள் மூலம் அது சார்ந்த தொழில்களும் முன்னேற்றம் அடைந்து வருகிறது. விளையாட்டு வீரர்களின் சிறப்பான எதிர்காலத்திற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன்.  மிகப்பெரிய இலக்குகளை சாதிக்கும் திறன் நம்மிடம் உள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

Please follow and like us:

You May Also Like

More From Author