சென்னையில் புத்தக கண்காட்சி – லக்கி சான்ஸ்!

Estimated read time 1 min read

சென்னை புத்தக கண்காட்சி வரும் 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் 5 -ம் தேதி தொடங்கி, 21 ம் தேதி வரை  நடைபெறும் என தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்கம் (பபாசி) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஒவ்வொரு வருடமும், ஜனவரி மாதம் வந்துவிட்டாலே, புத்தகக் கண்காட்சி குறித்த எண்ணங்கள் நமது மூளையில் ஓடதுவங்கிவிடும். சென்னை புத்தகக் கண்காட்சியில், அனைத்து பதிப்பகத்தின் புத்தகங்களும் கிடைக்கும்.

அதுமட்டுமல்லாமல், எங்கும் கிடைக்காத பல புத்தகங்கள் புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும். அதுவும் சிறப்புத் தள்ளுபடி விலையில் புத்தகம் விற்கப்படுவதால் புத்தகப்பிரியர்கள் இந்தக் கண்காட்சியைத் தவறவிடுவதில்லை. இதனால் புத்தகக்கண்காட்சி நடைபெறும் நாள் குறித்த எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வந்தது.

இந்த நிலையில், 2024 -ம் ஆண்டு நடைபெற உள்ள புத்தகக் கண்காட்சி குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, சென்னை புத்தகக் காட்சி வரும் ஜனவரி மாதம் 5 ஆம் தேதி தொடங்குகிறது. தொடர்ந்து நடைபெறும் புத்தகக் கண்காட்சி 21 -ம் தேதி நிறைவு பெறுகிறது. வழக்கம் போல் இந்த ஆண்டும் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் நடைபெறவுள்ளது.

இதற்கான  ஏற்பாடுகளை, தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்கம் (பபாசி) சார்பில் செய்யப்பட்டு வருகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author