தமிழகத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது; 5 மணி வரை 63.20% வாக்குப்பதிவு

Estimated read time 0 min read

இந்தியாவின் நாடாளுமன்றத்திற்கான பொதுத்தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்தில் நிறைவு பெற்றது.
காலை 7 மணிக்கு துவங்கிய இந்த வாக்குப்பதிவு, மாலை 6 வரை நடைபெற்றது.
தமிழகத்தின் 39 தொகுதிகளில் மாலை 5 மணி நிலவரப்படி 63.20 விழுக்காடு வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையர் சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளார்.
அதோடு, 5 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 67.52 விழுக்காடும், குறைந்தபட்சமாக தென் சென்னையில் 57.04 விழுக்காடு வாக்குகளும் பதிவாகியுள்ளது எனத்தெரிவித்தார்.
நாமக்கல் மக்களவைத் தொகுதியில் 67.37 % வாக்கு பதிவும்,ஆரணி தொகுதியில் 67.34 % வாக்குகளும் பதிவானதாக அவர் தெரிவித்தார். மத்திய சென்னையை பொறுத்தவரை 57 .25 % வாக்குகள் பதிவாகியுள்ளன.

Please follow and like us:

You May Also Like

More From Author