தமிழக சட்டப்பேரவையில் நடந்தது என்ன? ஆளுநர் மாளிகை விளக்கம்!

Estimated read time 0 min read

ஆளுநர் உரை தொடர்பாகவும், தமிழக சட்டப்பேரவையில் நடந்தது என்ன என்பது தொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவங்கியது. இந்நிலையில், தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டதால் சுமார் 2 நிமிடம் மட்டுமே ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை வாசித்தார். இந்நிலையில் ஆளுநர் உரை தொடர்பாகவும், தமிழக சட்டப்பேரவையில் நடந்தது என்ன என்பது குறித்தும் ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பு ஒன்றை  வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளளதாவது:

கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி தமிழக அரசிடம் இருந்து வரைவு ஆளுநர் உரை  பெறப்பட்டது. தேசிய கீதத்திற்கு உரிய மரியாதை கொடுக்கும் வகையில், ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் அதை இசைக்க வேண்டும். இது தொடர்பாக, கடந்த காலங்களில் முதலமைச்சர் மற்றும் சபாநாயகர் ஆகியோருக்கு ஆளுநர் கடிதம் எழுதியுள்ளார்.

கவர்னரின் உரையானது அரசின் சாதனைகள், கொள்கைகள் மற்றும் திட்டங்களைப் பிரதிபலிக்க வேண்டும். தவறான அறிக்கைகளை வெளியிடுவதற்கும், அப்பட்டமான அரசியல் கருத்துக்களை வெளியிடுவதற்கும் ஒரு மன்றமாக இருக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தினார். கவர்னரின் அறிவுரையை அரசு புறக்கணித்தது.

இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (பிப்ரவரி 12, 2024) காலை 10:00 மணியளவில் அவையில் ஆற்றிய உரையில், சபாநாயகர், முதலமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்

அணியென்ப நாட்டிவ் வைந்து

திருக்குறளையும் அவர் மேற்கோள் காட்டி பேசினார்.

அரசியலமைப்புச் சிறப்புகளைக் கருத்தில் கொண்டு, உண்மைக்கு மாறான தவறான கூற்றுக்கள் கொண்ட உரையை படிக்க முடியாத இயலாமையை ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிப்படுத்தினார். அவைக்கு மரியாதை தெரிவித்து, தமிழக மக்களின் நலனுக்காக இந்த அமர்வு பயனுள்ளதாக அமைய வாழ்த்துகிறேன் என்று கூறி அவர் தனது உரையை முடித்தார்.

பின்னர் சபாநாயகர் ஆளுநர் உரையின் தமிழாக்கத்தைப் படித்தார். ஆளுநர் உரை முடியும் வரை ஆர்.என்.ரவி அங்கேயே அமர்ந்திருந்தார். சபாநாயகர் உரையை முடித்ததும், திட்டமிட்டபடி ஆளுநர் தேசிய கீதத்திற்காக எழுந்தார்.

இருப்பினும், சபாநாயகர், கால அட்டவணையைப் பின்பற்றுவதற்குப் பதிலாக, ஆளுநருக்கு எதிராக ஒரு அவதூறைத் தொடங்கினார். அவரை நாதுராம் கோட்சே உள்ளிட்டோரை பின்பற்றுபவர் என்று கூறினார்.

சபாநாயகர் தனது தகாத நடத்தையால் தனது நாற்காலியின் கண்ணியத்தையும், சபையின் மாண்பையும் குறைத்தார். சபாநாயகரின் செயலால் தமது பதவி மற்றும் சபையின் கண்ணியத்தைக் கருத்தில் கொண்டு ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவையை விட்டு வெளியேறினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author