திமுக ஃபைல்ஸ் பகுதி 3 வெளியீடு! – அண்ணாமலை

Estimated read time 1 min read

திமுக ஆ. ராஜவின் 2ஜி ஊழல் குறித்து, திமுக ஃபைல்ஸ் பகுதி 3-யை தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.

திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மற்றும் திமுக முதல் குடும்பத்துடன் தொடர்புள்ள பினாமி தகவல்கள் அடங்கிய, திமுக ஃபைல்ஸ் பகுதி 2 ஆவணங்களையும், மேலும் ரூ.5600 கோடி மதிப்பிலான 3 ஊழல்கள் குறித்த ஆதாரங்களை தமிழக ஆளுநரிடம் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடந்த ஆண்டு வழங்கினார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் திமுக ஃபைல்ஸ் பகுதி 3-யை அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டிருந்தார். அதில், திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு தமிழ்நாடு மாநில உளவுத்துறையின் முன்னாள் தலைவர் எம் எஸ் ஜாபர் சைட் இடையேயான உரையாடல் பதிவை ‘திமுக ஃபைல்ஸ் பகுதி 2’ வீடியோவை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், தற்போது ஆ. ராஜா திமுக எம்பி, தமிழ்நாடு மாநில உளவுத்துறையின் முன்னாள் தலைவர் எம் எஸ் ஜாபர் சைட் இடையேயான உரையாடல் பதிவை ‘திமுக ஃபைல்ஸ் பகுதி 3’ வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து தனது பதிவில்,

Continuation of our exposè of how DMK manipulated the CBI enquiry during the 2G Probe.#DMKFiles3

Second tape: Conversation between DMK MP & former Min. Thiru A Raja (the prime accused in the 2G case) & MS Jaffar Sait, a former chief of TN State Intelligence.

Witnesses… pic.twitter.com/poHca6EHKO

— K.Annamalai (@annamalai_k) January 17, 2024

2ஜி விசாரணையின் போது சிபிஐ விசாரணையை திமுக எப்படி கையாண்டது என்பது பற்றிய தொடர்ச்சி.

#திமுக கோப்புகள்3

இரண்டாவது டேப்: திமுக எம்பி மற்றும் முன்னாள் அமைச்சருக்கு இடையேயான உரையாடல். ஆ. ராஜா (2ஜி வழக்கில் முக்கிய குற்றவாளி) & எம்எஸ் ஜாபர் சைட், தமிழக மாநில உளவுத்துறையின் முன்னாள் தலைவர்.

சாட்சிகள் தயார்படுத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டனர்: ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2ஜி விசாரணையை இப்படித்தான் நடத்தியது.

இத்துடன் முடிவதில்லை… எனத் தெரிவித்துள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author