தூத்துக்குடியில் இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் மருத்துவ முகாம்!- சேவா பாரதி தென்தமிழ்நாடு

Estimated read time 0 min read

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதி கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், பலர் வீடு, வாசல்களை இழந்தனர். மேலும், பலர் கடும் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

மழையில் நனைவதாலும், மழைக் காலத்தில் சாப்பிட கூடாத உணவு வகைகளை உட்கொள்வதாலும், குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் உடல் நலப் பிரச்சினைகள் ஏற்படும்.

பொதுவாக, நோய் எதிர்ப்பாற்றல் மழைக் காலத்தில் பலருக்கும் சற்றுக் குறைந்து காணப்படும். காய்ச்சல் சளி, இருமல், தலைப்பாரம், அஜீரணம், குறிப்பாக ஆஸ்துமா பிரச்சினை உள்ளவர்கள் கடும் இன்னலுக்கு ஆளானார்கள். மேலும், வயதானவர்கள் மூட்டு வலியால் அவதிப்பட்டனர்.

இதனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சேவா பாரதி தென்தமிழ்நாடு சார்பில், இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் முகாமில் கலந்துகொண்டு பயன்பெற்றனர். முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு இரத்த பரிசோதனை மற்றும் பிரஷர் செக்அப் உள்ளிட்டவையும் செய்யப்பட்டன.

நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதற்கு ஏற்ப மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மருந்து, மாத்திரை வழங்கப்பட்டது.

Please follow and like us:

You May Also Like

More From Author