தூத்துக்குடி : வெள்ளம் பாதித்த பகுதிகளில் 11 டன் நிவாரணப்பொருள்கள்!

Estimated read time 1 min read

வெள்ளம் பாதித்த தூத்துக்குடி மாவட்டத்தில் 11 டன் நிவாரண  பொருள்கள் அளிக்கப்ட்டுள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக டிசம்பர் 17 மற்றும் 18ஆம் தேதிகளில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் நீர்நிலைகள் நிரம்பின. கொட்டித்தீர்த்த மழையால் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் பொதுமக்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டனர்.

நெல்லை உள்ளிட்ட மாவட்டங்கள் மழை பாதிப்பில் இருந்து மீண்டு வரும் நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. தாமிரபரணி ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில்  பெய்த மழையால் ஸ்ரீவைகுண்டம் அணை நிரம்பி வழிகிறது. இதுவரை  இந்த அளவுக்கு மழை பெய்ததில்லை. மீட்புப் பணிகளில் ராணுவம், விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  வெவ்வேறு பகுதியில் ஜந்தாவது நாளான நேற்று விமானங்கள் மூலம் சுமார் 11 டன் நிவாரண பொருள்கள் அளிக்கப்பட்டுள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் தெற்கு ஏர் கமாண்ட் இந்தியன் ஏர் ஃபோர்ஸ் சார்பில் பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது, அதில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஐந்தாவது நாளில், IAF MI-17 V5 மற்றும் ALH-Dhruv விமானங்கள் 11 டன் நிவாரணப் பொருட்களை அளித்ததாகவும்,  தூத்துக்குடி மாவட்டத்தில் 12 வெவ்வேறு இடங்களில், 59 டன் நிவாரணப் பொருட்கள் ஏர்டிராப் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

On the fifth day of continued HADR operations in south Tamil Nadu, affected by landslides and floods, #IAF MI-17 V5 and ALH-Dhruv air dropped over 11 tons of relief materials in 12 different places in Thoothkudi District .This aggregates to air drop of 59 tons of relief material. pic.twitter.com/MK7KPDZvnU

— SAC_IAF (@IafSac) December 23, 2023

Please follow and like us:

You May Also Like

More From Author