நமது இலட்சியம் நிறைவேறும் நிறைவான ஆண்டாக இந்த புத்தாண்டு அமையட்டும்! – முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து.!!

Estimated read time 1 min read

மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் -2024 ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி.

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், புதிய சிந்தனை, புதிய இலக்குகளுக்கான வாசலைத் திறந்து வைத்து நம்பிக்கையின் ஒளிக்கதிர்களுடன் பிறக்கிறது இனிய புத்தாண்டு! தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதிக்கான பயணத்தில் எத்தனை தடைகள் எதிர்பட்டாலும் அவற்றைத் தகர்த்தெறிந்து முன்னேறும் நமது திராவிட மாடல் அரசின் வெற்றி பயணம், வரும் புத்தாண்டில் புதிய சாதனை உச்சங்களைத் தொடும். அதற்கான நம்பிக்கையும் உறுதியும் புத்தாண்டில் நிறைந்துள்ளது.

‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற நமது இலட்சியம் நிறைவேறும் நிறைவான ஆண்டாக இந்த புத்தாண்டு அமையட்டும்! அனைவருக்கும் எனது இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், இந்த #2023-ஆம் ஆண்டு நினைவலைகளின் #Throwback காணொளியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்… இனிய மற்றும் எதிர்பாராத நிகழ்வுகளால் பலவித அனுபவங்களை வழங்கிய இந்த 2023-ஐ வழியனுப்பி, புதிய அனுபவங்களைப் பெறவும் சாதனைகளைத் தொடர்ந்து படைக்கவும் #2024-ஐ வரவேற்கிறேன்!” என தெரிவித்து வீடியோவை பகிர்ந்துள்ளார்..

இந்த #2023-ஆம் ஆண்டு நினைவலைகளின் #Throwback காணொளியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்…

இனிய மற்றும் எதிர்பாராத நிகழ்வுகளால் பலவித அனுபவங்களை வழங்கிய இந்த 2023-ஐ வழியனுப்பி, புதிய அனுபவங்களைப் பெறவும் சாதனைகளைத் தொடர்ந்து படைக்கவும் #2024-ஐ வரவேற்கிறேன்! pic.twitter.com/8B3cdJcGFD

— M.K.Stalin (@mkstalin) December 31, 2023

மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் -2024 ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி#CMMKSTALIN | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan pic.twitter.com/y7c9ulqjKc

— TN DIPR (@TNDIPRNEWS) December 31, 2023

Please follow and like us:

You May Also Like

More From Author