பயணிகளின் கவனத்திற்கு – மின்சார இரயில் சேவையில் மாற்றம்!

Estimated read time 1 min read

அரக்கோணம் – ரேணிகுண்டா வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால், மின்சார இரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு இரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரக்கோணம் – ரேணிகுண்டா வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் வரும் 27 மற்றும் 28-ஆம் தேதிகளில், மின்சார இரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, திருத்தணியில் இருந்து அரக்கோணத்துக்கு நாளை இரவு 9.15 மற்றும் 11.15 மணிக்கு புறப்படும் மின்சார இரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. வரும் 28-ஆம் தேதி அரக்கோணத்தில் இருந்து காலை 4 மணிக்கு திருத்தணிக்கு செல்லும் மின்சார இரயில் ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல, மூர்மார்க்கெட்டில் இருந்து திருத்தணிக்கு நாளை இரவு 7 மற்றும் 8.20 மணிக்கு புறப்படும் மின்சார இரயில்கள், சென்னை கடற்கரையில் இருந்து திருத்தணிக்கு மாலை 6.30 மணிக்கு செல்லும் மின்சார இரயில்கள் அரக்கோணம் – திருத்தணி இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author