பல கோடி மோசடி! – மத்திய அரசிடம் சிக்கிய காஸா கிராண்ட்!

Estimated read time 1 min read

காஸா கிராண்ட் கட்டுமான நிறுவனம் சென்னை நாவலூர் அருகே உள்ள தாழம்பூரில் கட்டிய அடுக்கு மாடி குடியிருப்பில் பல லட்சங்களை முதலீடு செய்து வீடு வாங்கியுள்ளனர்.

இதில், 500 -க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு இது வரை முறையான சொத்து ஆவணங்களை அந்த நிறுவனம் வழங்கவில்லை என்றும், இதனால் பட்டா பதிவு செய்ய முடியவில்லை சாட்டி சென்னையில் போராட்டம் நடத்தினர்.

கடந்த நான்கு வருடங்களாகவே 500 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதை கடந்து போய் விட முடியாது.

இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில், தமிழக பாஜக துணைத் தலைவர் நாராணயன் திருப்பதி சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

1. உரிய ஆவணங்கள், பட்டா இல்லாமல் எப்படி பத்திரப்பதிவு செய்தார்கள்?

2. 500 வீட்டின் சொந்தக்காரர்கள் எப்படி உரிய ஆவணங்கள் இல்லாமல் பதிவு செய்வதற்கு ஒப்பு கொண்டார்கள்?

3. அதே போல், பெரும்பாலோனோர் (குறைந்தது 90%), வங்கிகளின் மூலம் கடன் பெற்றுத்தான் வீடுகளை வாங்கியிருப்பார்கள் ? அப்படியானால், வங்கிகள் எப்படி குறைபாடுள்ள ஆவனங்களை சட்ட ரீதியாக பதிவு செய்ய, கடன் வழங்க அனுமதித்தார்கள்? எந்த வங்கி அல்லது வங்கிகள் கடன் கொடுத்துள்ளன?

4. இந்த குடியிருப்பு அமைந்திருக்கும் ஒரு பகுதி நிலம், அரசாங்கம் கையகப்படுத்தியிருக்கும் உரிமையற்ற நிலம் என்ற அனாதீன நிலம் என்னும்போது, தனி நபர் உரிமை கொண்டாட முடியாது என்று அரசு குறிப்பிட்டிருக்கும் நிலையில், இந்த நிலத்தை எப்படி பதிவு செய்தார்கள்? யார் இதற்கு துணை புரிந்தனர்?

5. பத்திர பதிவு அலுவலகம் அனாதீன நிலத்தில் பல்வேறு குடியிருப்புகளை பதிவு செய்தது எப்படி? அனாதீன நிலம் என்று தெரிந்தும் அந்த தனியார் நிறுவனம் மக்களிடம் பணம் பெற்று பதிவு செய்தது எப்படி?

6. எல்லாவற்றிற்கும் மேலாக, ஒவ்வொரு ஆவணத்தையும் கண்களில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு பார்க்க வேண்டிய வங்கிகள் முறை தவறி, சட்ட விரோதமாக கடன் கொடுத்தது ஏன்? யார்?

7. கடந்த நான்கு வருடங்களாக குடியிருப்பு வாசிகள் புகார் அளித்தும் மாநகர காவல் துறை நடவடிக்கை எடுக்காதது என்?

8. சாமான்ய மக்களை ஏமாற்றினால் அரசு இயந்திரம் கண்டு கொள்ளாதா?

9. இது குறித்த வழக்கு உச்சநீதி மன்றத்தில் இருப்பதாக சொல்லப்படுகிற நிலையில், வழக்கு கட்டுமான நிறுவனத்திற்கு பாதகமாக வரும் நிலையில், வீட்டின் சொந்தக்கார்களுக்கு நிறுவனம் பணத்தை திருப்பி கொடுக்குமா? ஒரு வேளை, தமிழக அரசுக்கு சாதகமாக தீர்ப்பானால், வங்கிகளின் அடமானத்தில் இருக்கக்கூடிய வீடுகளின் நிலை என்ன? வங்கிகளின் பணம் திரும்பி வர வாய்ப்பில்லை என்பது உண்மையா?

11. அதே போல், தீர்ப்பு வாடிக்கையாளர்களுக்கு பாதகமாக அமைந்தால் என்ன செய்வது?

12. செலுத்திய பணமும் திரும்ப வராத நிலையில், சொத்தும் பறிபோகிற நிலையில், பொது மக்களின் இந்த துயர நிலைக்கு காரணம் யார்?

சந்தேகமேயில்லாமல் இது ஒரு மிக பெரிய மோசடி. எனவே, இந்த விவகாரம் தொடர்பாக மத்திய புலனாய்வு விசாரணை தேவை என அழுத்தம் திருத்தமாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான கோப்புகள் டெல்லியில் உள்ள சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாம். இதில், எந்த புலனாய்வு அமைப்பு விசாரணையில் குதிக்கப்போகிறது என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.

Please follow and like us:

You May Also Like

More From Author