வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இரு தினங்களுக்கு கனமழை எச்சரிக்கை

Estimated read time 1 min read

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
அதோடு கூடுதலாக தற்போது வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகி உள்ளதாகவும், அதனால் அடுத்த 2 நாட்களுக்கு தமிழ்நாட்டில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அவர்கள் வெளியிட்ட அறிக்கைப்படி, “தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் புதன்கிழமை ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது வடகிழக்கு திசையில் நகர்ந்து 24-ஆம் தேதி வாக்கில், மத்திய வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும்”.

Please follow and like us:

You May Also Like

More From Author